திடீரென பேரை மாத்தினதுக்கு இதுதான் காரணமா?.. ரவி விஷயத்தில் வைரலாகும் வீடியோ..

by Akhilan |   ( Updated:2025-01-14 14:30:30  )
Ravi mohan
X

JayamRavi: நடிகர் ஜெயம் ரவி இனி தன்னை ரவி என அழைக்குமாறு நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பின்னால் நடந்த விஷயம் குறித்த வைரல் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் ஜெயம் ரவி எடிட்டர் மோகனின் மகனாக ஜெயம் படத்தில் அறிமுகமானார். ஆனால் நடிப்பில் மிரட்டி தன்னுடைய திறமையை முதல் படத்திலே நிரூபித்தார். அப்படத்தில் இயக்குனரான ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா அறிமுகமாகினார்.

தம்பிக்காக ரீமேக் படங்களை மட்டுமே நிறைய இயக்கியவர் ஜெயம் ராஜா. ரவிக்கு கோலிவுட்டில் அங்கீகாரம் கிடைக்க தொடங்கி வாய்ப்புகளும் குவிந்தது. எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தாஸ், மழை என வெற்றி படங்களை நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து ஹிட்டடித்து வந்தார். அவரின் மாமியார் கையில் கால்ஷூட்டை கொடுத்ததில் இருந்து தான் பிரச்னை உருவானதாக கூறப்படுகிறது. பிற படங்களுக்கு கால்ஷூட் கொடுக்காமல் தங்களுடைய நிறுவனத்தின் படங்களில் ரவியை நடிக்க வைக்க தொடங்கினார்.

ஆனால் அது எதுவுமே பெரிய அளவில் ஹிட்டடிக்கவில்லை. தொடர்ச்சியாக பிளாப் லிஸ்ட் குவிந்தது. பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்னர் ஜெயம் ரவியின் நடிப்பில் ஹிட்டடுத்தது 2019ம் ஆண்டு வெளியான கோமாளி. அதற்கு முன்னரும் பெரிய ஹிட் லிஸ்ட் அவரிடம் இல்லை.

இதை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து இருவரும் மாற்றி மாற்றி அறிக்கை வெளியிட்டு அது ஒரு பக்கம் சர்ச்சையை உருவாக்கியது. ஜெயம் ரவி

இதையடுத்து ரவி நடிப்பில் தற்போது காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ச்சியாக, ஜெயம் ரவி நடிப்பில் எஸ்கே25, தனி ஒருவன் 2, ஜீனி படங்களில் நடித்து வருகிறார். இதில் எஸ்கே25 திரைப்படத்தில் வில்லன் வேடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெயம் ரவி தன்னை இனி ரவி மோகன் என அழைக்கலாம். ஜெயம் சேர்க்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்து இருந்தார். தொடர்ச்சியாக தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து அறிவித்து இருந்தார்.

இதற்கு காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. காதலிக்க நேரமில்லை பட புரோமோஷனுக்காக விஜே சித்துவின் மொட்டை மாடி பார்ட்டியில் கலந்துக்கொண்டு இருக்கிறார். அப்போது சித்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும் ஜெயம் ரவி என அழைக்கிறார்கள். ஏன் நேரம் அல்லது நேரமில்லை ரவி என மாற்றிக்கொள்ளுங்கள் என கலாய்த்திருக்கிறார்.

அந்த வீடியோவிலேயே ரவி கேட்கும் போதே அதிருப்தியாக பார்த்து இருக்க அதை தொடர்ந்துதான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டாராம். இனி ரவி மோகன் தன்னுடைய படங்களில் அதிக ஆர்வம் காட்டினாலே எந்த பிரச்னையும் இல்லாமல் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறலாம் எனவும் கருத்துகள் நிலவி வருகிறது.

Next Story