இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!.. ரஜினி படமும் இருக்கு!. வாங்க பார்ப்போம்!...

by Murugan |   ( Updated:2024-12-11 10:57:54  )
இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!.. ரஜினி படமும் இருக்கு!. வாங்க பார்ப்போம்!...
X

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்கள் வெளியாகும். படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அந்த படங்கள் தியேட்டரில் இருக்கும். அமரன் படமெல்லாம் இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம், இப்போதெல்லாம் திரைப்படங்களை வியாழக்கிழமையும் ரிலீஸ் செய்ய துவங்கிவிட்டார்கள். அதற்கு காரணம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் வசூலை எடுத்துவிடலாம் என்பதுதான் கணக்கு.

அமரன் ஹிட்:

அமரன் படம் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்ததால் சூர்யாவின் கங்குவா படத்திற்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கங்குவா படம் தூக்கப்பட்ட பின்னரும் அமரன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது டிசம்பர் 13ம் தேதி என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என்பதை பார்ப்போம்.

சூது கவ்வும் 2:

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள சூது கவ்வும் 2 படம் 13ம் தேதி வெளியாகவுள்ளது. சூது கவ்வும் படத்தின் முதல் பாகம் விஜய் சேதுபதி நடித்து 2013ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. சூது கவ்வும் 2 படத்தை சிவி குமார் தயாரித்துள்ளார். சிவாவோடு அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ரெட்டி, பாபி சிம்ஹா, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.அருண் இப்படத்தை இயக்கியுள்ளார்.


மிஸ் யூ:

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் யூ படமும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. சித்தா திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார் சித்தார்த். ஆனால் அந்த படம் ஓடவில்லை. அதன்பின் அவர் நடித்த திரைப்படம்தான் மிஸ் யூ. தலைப்பை பார்க்கும்போதே இது காதல் கதை என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆஷிகா ரங்கநாத் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை என்.ராஜசேகர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாகிறது.


தளபதி

அடுத்து பரத் நடிப்பில் உருவாகியுள்ள Once upon a time in madras படமும் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இப்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கிறார் பரத். ஆக்‌ஷன் கிரைம் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. பரத்தின் கையில் ஒரு துப்பாக்கி கிடைக்க என்னவாகிறது என்பதுதான் கதை. பிரசாத் முருகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அபிராமி, அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கிறார்கள்.

இந்த 3 புதிய படங்கள் மட்டுமின்றி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தளபதி திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள். மேலும் அன்சல் பால் நடித்துள்ள 'மழையில் நனைகிறேன்' என்கிற திரைப்படமும் டிசம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story