2024-ல் 18 படங்கள் மட்டுமே ஹிட்!.. 1000 கோடி நஷ்டம்!.. மீண்டு வருமா கோலிவுட்?!..

by Murugan |
movies
X

movies

2024 Tamil movies: கோலிவுட் என அழைக்கப்படும் தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடிகள் முதலீடு செய்து ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாக்கப்படுகிறது. அதில் சில படங்கள் பல காரணங்களால் ரிலீஸே ஆகாது. அப்படி மட்டும் ஒவ்வொரு வருடமும் பல கோடிகள் பெட்டிக்குள் முடங்குகிறது.

கடந்த 10 வருடங்களுக்கும் மேல் தமிழில் உருவாகி இன்னமும் வெளிவராத நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் பெட்டியில் தூங்கிக்கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலானவை சின்ன பட்ஜெட் படங்களாக இருக்கும். பல வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த மதகஜ ராஜா படம், சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான சில படங்கள் என எல்லாமே இன்னமும் வெளியாகவில்லை.


ஒருபக்கம், 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தாலும் அவை எல்லாமே வெற்றிப்படங்களாக அமையாது. 10ல் ஒரு படம் மட்டுமே வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கும். பெரிய நடிகர்களை போட்டு பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்களும் கூட சில சமயம் நஷ்டத்தை கொடுத்துவிடும்.

அதேபோல், லப்பர் பந்து போல சின்ன நடிகர்களை போட்டு தயாரிக்கும் படங்கள் நல்ல லாபத்தையும் கொடுத்துவிடும். சினிமாவில் என்ன நடக்கும் என கணிக்கவே முடியாது. ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனால் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வும்.


இதற்கு பெரிய உதாரணமாக கமலின் இந்தியன் 2 மற்றும் சூர்யாவின் கங்குவா படத்தையும் சொல்ல முடியும். இந்த 2 படங்களுமே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியது. அதிலும், கங்குவா படத்திற்கு அதிகமான புரமோஷன்களும் செய்யப்பட்டு பில்டப் செய்யப்பட்டது.

2024ல் தமிழில் மொத்தம் 241 திரைப்படங்கள் உருவாகி அதில் 18 திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதாக திரைப்பட வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த படங்கள் 3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் நிலையில் படங்களின் தோல்வியால் 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும், 2025ம் வருடம் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட எல்லா நடிகர்களின் படங்களும் வெளியாவதால் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்குமா என பொறுந்திருந்தே பார்க்க வேண்டும்.

Next Story