Suriya: எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க!.. 3 படங்களை இறக்கும் சூர்யா!.. ஹிட் கான்பார்ம்!...
நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல வருடங்களாகவே பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை. சிங்கம் 2-வுக்கு பின் ஒரு மெகா ஹிட் படத்தை அவரால் கொடுக்க முடியவில்லை. அவரும் பல இயக்குனரிடம் கதைகளை கேட்டு, தனக்கு சிறந்த கதை என தோன்றும் ஒன்றை தேர்ந்தெடுத்து நடித்து பார்த்தார். ஆனால் கிளிக் ஆகவில்லை. அதேநேரம் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த சூரரைப் போற்று, ஞானவேல் இயக்கத்தில் நடித்த ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.
அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான கங்குவா படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த படம் பல மொழிகளில் வெளியாகிறது, 2 ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என்றெல்லாம் பில்டப் ஏத்தினார்கள். ஆனால் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதோடு, ட்ரோலிலும் சிக்கியது. பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி. அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதன்பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற திரைப்படத்தில் சூர்யா நடித்தார். பக்கா கமர்சியல் மசாலா படமாக உருவான கருப்பு சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் இதுவரை வெளியாகவில்லை. அதோடு இன்னும் 25 சதவீத படப்பிடிப்பும் பாக்கியிருக்கிறது. இந்நிலையில்தன் அடுத்த ஆண்டு அதாவது 2026-ல் சூர்யாவின் மூன்று படங்கள் தொடர்ந்து வெளியாகவுள்ளது.
எப்படியும் கருப்பு திரைப்படத்தை இந்த வருடத்திற்குள் முடித்து விடுவார்கள். அனேகமாக ஜனவரி 23ம் தேதி இப்படம் வெளியாகலாம் என சிலர் சொல்கிறார்கள். அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா இப்போது நடித்து வரும் படம் 2026 கோடை விடுமுறையில் வெளியாகும் என்கிறார்கள். அதேபோல் அந்த படத்திற்கு பின் மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்கிறார்கள்.
இப்படி 2026ம் வருடம் சூர்யாவின் 3 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவுக்கு பல வருடங்களாக ஹிட் படம் அமையவில்லை என்கிற விமர்சனத்தை இந்த படங்கள் உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
