முத்தமழை இங்கு கொட்டித் தீராதா!.. ஜோஜு ஜார்ஜ் மகள் வெர்ஷன் இன்னும் சூப்பரா இருக்கே பாஸ்!..

by SARANYA |
முத்தமழை இங்கு கொட்டித் தீராதா!.. ஜோஜு ஜார்ஜ் மகள் வெர்ஷன் இன்னும் சூப்பரா இருக்கே பாஸ்!..
X

நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமான தக் லைஃப் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இப்படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக நடைப்பெற்றுக்கொண்டிருகின்றது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்ற தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், அலி ஃபாசல், ரோஹித் சரஃப், பாபுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மொத்தம் 9 பாடல்கள் உருவாகி உள்ளன.


கர்நாடகாவில் நடந்த தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், “கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது” என்று கூறியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடகாவில் பலரும் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர். இதற்கு கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதாகவும், இதனால் கர்நாடகாவில் படத்தின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தக் லைஃப் படத்தில் பாடகி தீ பாடிய முத்தமழை பாடலை சின்மையி இசை வெளியீட்டு விழாவில் பாடியது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இன்று தக் லைஃப் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் காரில் தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருக்கும் போது தன் மகள் கியூட்டாக பாடிய முத்த மழை பாடலின் விடியோவை ஷேர் செய்துள்ளார்.


மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் தமிழில் ஜகமே தந்திரம், ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தக் லைஃப் படத்தில் அவரும் முக்கிய வில்லன் எனக் கூறப்படுகிறது. தனது அன்பான மனைவி மற்றும் அழகான 3 குழந்தைகளுடன் காரில் செல்லும் போது அவருடைய மகள் சாரா இந்த பாடலை பாடியுள்ளார்.

Next Story