துள்ளுவதோ இளமை ஹீரோவின் பரிதாப நிலை.. வெளியான அதிர்ச்சி வீடியோ

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அவருடைய தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை. முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி இந்த கதை அமைந்ததனால் இளசுகள் மத்தியில் படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது .இந்த படத்தில் தனுசையும் தாண்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் அபிநய்.
கிட்டத்தட்ட படத்தில் தனுஷுக்கு எதிரான ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்திற்குப் பிறகு ஜங்ஷன் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் அபிநய். அதன் பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். பார்ப்பதற்கு வெளிநாட்டுக்காரரைப் போல் இருந்ததனால் பல படங்களில் இவரை வெளிநாட்டு மாப்பிள்ளை கதாபாத்திரத்திலேயே நடிக்க அழைத்தனர். அதை அவர் விரும்பவில்லை.
அதனால் படங்களின் வாய்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இதனால் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாகவும் முன்பு ஒரு பேட்டியில் அவரே கூறி இருக்கிறார். இந்த நிலையில் இவருடைய திடீர் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் துள்ளுவதோ இளமை படத்தில் ஹேண்ட்ஸ்சமாக நடித்த அபிநயா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
உடல்நிலை குறைவு ஏற்பட்டு சில காலம் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு லிவர் சிரோசிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதினால் அவருடைய வயிறு வீங்கி எழும்பும் தோலுமாக மாறிப்போனார் .மீண்டும் அவருடைய மருத்துவ செலவுக்கு 25 லட்சம் தேவைப்படுவதால் யாரேனும் கொடுத்து உதவ முடியுமா என்றும் கேட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்திருக்கிறது.
ஏனெனில் பல படங்களில் பார்ப்பதற்கு ஹேண்ட்சமாக இருந்திருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் நொந்து வருகின்றனர். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் வேறு ஏதாவது வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை ஓட்டி இருக்கலாம். சினிமாவை மட்டுமே நம்பினால் இப்படித்தான் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மாறிவிட்டார் அபிநய்.
இதோ அந்த வீடியோ: https://x.com/kayaldevaraj/status/1897356492241809747