Categories: Cinema News latest news

சிவா இதே நெனப்போடு இருந்தா இனிமே அவர் படம் ஓடாது.. 2 டிகிரி வைச்சு பிழைக்க வேண்டியது தான்..

சின்னத்திரையில் சிகரம் தொட்ட சிவா :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. தனது தனி திறமையால் அந்த சீசனில் சிவகார்த்திகேயன் Title வென்றார். அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் Reality show தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அதுவரை tv-யில் தொகுப்பாளர் என்றால் அதற்கு ஒரு Formula இருந்தது. அந்த நிலைமையை உடைத்து Anchoring style-லில் புதுமை கொண்டு வந்தவர்சிவகார்த்திகேயன்.

ஹீரோ என்ட்ரி :

தனது கலகலப்பான பேச்சால் அரங்கில் இருப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வார். அதிலும் ’அது இது எது’ நிகழ்ச்சி இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. அதன் காரணமாக இவருக்கு இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் ’மெரினா’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தன்னுடைய ஜானர் காமெடி கதைகளை தேர்வு செய்து மக்கள் மத்தியில் சென்றடைந்தார்.

அடுத்தடுத்த படங்களில் தன்னை புதுப்பித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் வெகு விரைவிலயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார். கடந்தாண்டு வெளியான ’அமரன்’ திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதுமட்டுமில்லாமல் அந்த படம் சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சிவாவின் Career best படமாக அமைந்தது.

அமரன் பிளாக்பஸ்டர் :

ஆனால் அதற்கு பின் வெளியான ’மதராஸி’ திரைப்படம் மக்களிடம் வரவேற்பு பெற தவறியது. இந்தப் படத்தை தயாரித்த ப்ரொடியூசருக்கும் சுமார் 30 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதைப் பற்றி சினிமா விமர்சகர் திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில், “சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ஒரு ஹீரோ காண திரைப்படப் படம் கிடையாது அதில் யார் நடித்தாலும் வெற்றி பெற்றிருக்கும்”.

tirupur subramaniam

தோல்விக்கான காரணம் :

”ஆனால் மதராஸி படம் வெற்றி பெறவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால் சிவகார்த்திகேயனின் முந்தைய திரைப்படங்கள் அனைத்தும் காமெடி திரைப்படங்களாக இருக்கும். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், டாக்டர், டான் என அனைத்து படங்களிலும் காமெடி தூக்கலாக இருக்கும்”.

இப்படியே போனால் ஆட்டம் குளோஸ் :

  • ”அதனால்தான் அவருடைய படங்கள் வெற்றி அடைந்தது. ஆனால் தற்பொழுது ஆக்சன் ஹீரோவாக மாற வேண்டும் என்று அவருடைய ட்ராக்கில் இருந்து மாறி பயணிப்பது சிவகார்த்திகேயனுக்கு ஆபத்துதான்”.
  • ”அவருடைய படங்களை எதிர்பார்த்து வரும் மக்களுக்கு 4 பாடல்கள், காமெடி காட்சிகளை கொடுத்துதான் ஆக வேண்டும். அதையெல்லாம் வேண்டாம் இனிமேல் அருவா வெட்டு குத்து என்று நினைப்போடு இருந்தால் கீழ விழ வேண்டியதுதான்”. என்று கூறியுள்ளார்.
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
SATHISH G