எஸ்.கே-வை விடாம துரத்தும் டைட்டில் பஞ்சாயத்து!.. முருகதாஸ் படத்தையும் விட்டு வைக்கல போலயே..
Actor Sivakarthikeyan: அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் ஒரு ஸ்ட்ராங்கான இடத்தைப் பிடித்து வைத்திருக்கின்றார் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படம் கொடுத்த வெற்றியால் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களை கமிட் செய்து பிஸியாக நடித்து வருகின்றார்.
சிவகார்த்திகேயன் லைன் அப்: அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்தால் இப்படத்தின் படப்பிடிப்பும் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருப்பதாக கூறப்படுகின்றது.
இது இல்லாமல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் எஸ்கே 25 திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
பராசக்தி திரைப்படம்: இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தவான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். மேலும் இப்படத்திற்கு பராசக்தி என்கின்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கின்றது.
படத்திற்கு இந்த டைட்டில் தான் வைக்கப் போகிறார்கள் என்கின்ற செய்தி ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. படத்தின் டைட்டில் தங்களுக்கு தான் சொந்தம் என்று நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த பஞ்சாயத்து பெரும் பிரச்சனையாக தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றது
எஸ்கே 23 டைட்டில் டீசர்: அமரன் திரைப்படத்தை முடித்தவுடன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டான திரைப்படம் எஸ்கே 23. படம் ஏறத்தாழ முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை படத்தின் டைட்டில் வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டிலை வெளியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளதாம். அதாவது இந்த படத்தின் டைட்டிலை வேறு ஒருவர் வைத்திருக்கின்றாராம். எப்போதும் போல் சிவகார்த்திகேயன் படங்களுக்கு பழைய படத்தின் டைட்டிலை வைக்கிறார்களா? அல்லது இவர்கள் வைக்கப் போகும் டைட்டிலின் உரிமையை வேறு ஒருவர் வைத்திருக்கின்றாரா? என்பது தெரியவில்லை.
ஆனால் தயாரிப்பாளர் ஒருவர் எஸ்கே 23 திரைப்படத்தின் டைட்டிலை வைத்திருப்பதால் அவரை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அவர் வெளிநாட்டில் இருப்பதால் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்து வருகின்றது. படத்தின் டீசர் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் அந்த தயாரிப்பாளரை சந்தித்து படத்தின் டைட்டிலை வைப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டால், உடனே ரிலீஸ் செய்து விடுவார்கள் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.