ரஜினிக்கு அது பிடிக்காது… என்னை அப்படிதான் நடத்துவார்.. பிரபல இயக்குனர் அதிரடி

Rajinikanth: ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையின் திரைப்படத்தை இயக்கியிருக்கும் டிஜே ஞானவேல் அவருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து தெரிவித்திருக்கும் விஷயங்கள் இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபலங்களை இயக்குவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. சில நடிகர்கள் மட்டும்தான் புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள். இன்னும் சிலரோ ஒன்று உள்ளது இரண்டு படங்களை எடுத்துக் கொடுத்த இயக்குனர்களை தங்களுடன் இணைத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் ரஜினிகாந்தின் தற்போதைய வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் டிஜே ஞானவேல். இவர் இயக்கத்தில் இதுவரை கூட்டத்தில் ஒருவன் மற்றும் ஜெய்பீம் திரைப்படங்கள் தான் வெளியாகி இருக்கிறது. இதில் கூட்டத்தில் ஒருவன் திரைப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் பிரியா ஆனந்த் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி சுமார் விமர்சனம் மட்டுமே பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் ஜெய் பீம் படத்தை இயக்கினார். உண்மை கதை என்றாலும் அதை திரைக்கதையில் எங்கும் பிசிறு தட்டாமல் கொடுத்து கைதட்டி வாங்கினார்.

இப்படத்தின் வெற்றியால் அவருக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஞானவேல் கூறும்போது, ரஜினி சாருக்கு ஸ்கிரிப்ட் படிக்கும் பழக்கம் கிடையாது. அவர் கதை சொல்லுவதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். நான் கதை சொல்லியே இரண்டு நாட்களில் மொத்த படத்தின் கதையையும் அவர் கிரகித்துக் கொண்டார்.

தன்னுடைய கதாபாத்திரத்தை எப்படி எடுத்துச் செல்வது என அவரே திட்டமிட்டார். அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு நிறைய சந்தேகம் இருந்தது. ஒரு நாள் அதிகாலையில் கூட ஒரு சீன் குறித்து வாய்ஸ் பதிவு போட்டு இருந்தார்.

நான் இரண்டு படம் தான் இயக்கி இருக்கிறேன். ஆனால் அவர் எனக்கும் அவருடைய குரு பாலசந்தருக்கு கொடுத்த அதே மரியாதையை கொடுத்தார். அந்த பண்புதான் அவரை இன்றளவும் சூப்பர்ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடி வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

ஜே ஞானவேல் தன்னுடைய வேட்டையன் படத்தில் நிறைய வித்தியாசமான அனுபவங்களை கையாண்டு வருகிறார்.

Related Articles
Next Story
Share it