ரஜினி ஒரு கீழ்ப்படிதல் உள்ள மாணவன்!.. பாராட்டும் ஞானவேல்!. அப்படி என்ன செஞ்சாரு?!..

சில இயக்குனர்களை தயாரிப்பாளர்களின் இயக்குனர் என சொல்வார்கள். எதற்கு எனில் சொன்ன பட்ஜெட்டில், சொன்ன நாட்களில் படம் எடுத்து கொடுத்துவிடுவார்கள். அதிலும் சிலர் சொன்ன தேதிக்கு முன்பே படத்தை முடித்துவிடுவர்கள். ஆர்.சுந்தர்ராஜன் எல்லாம் 23 நாட்களில் படமெடுத்திருக்கிறார்.

சில இயக்குனர்கள் சொன்ன பட்ஜெட்டை விட குறைவான செலவில் படத்தை முடித்துவிடுவார்கள். அவர்களைத்தான் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என சொல்வார்கள். விக்ரம், கே.எஸ்.ரவிக்குமார் எல்லாம் அப்படிப்பட்டவர்கள். அதேபோல், இயக்குனர்களின் நடிகர்கள் என சிலரை சொல்வார்கள்.

அதாவது, இயக்குனர் என்ன சொல்கிறாரோ மறுப்பு ஏதும் சொல்லாமல், அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்காமல் அவர் சொல்வதை செய்வார்கள். குறிப்பாக கதைகளில், காட்சிகளில் தலையிட மாட்டார்கள். இயக்குனர் ஒரு கதை சொல்லி அது பிடித்து நடிக்க சம்மதித்து விட்டால் அவ்வளவுதான் படப்பிடிப்பு தளங்களில் நடிப்பது மட்டுமே தனது வேலை என இருப்பார்கள்.

ரஜினி, விஜய் இரண்டு பேரை மட்டுமே இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். ரஜினிக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் இயக்குனரை கேட்டு தெளிவாக்கி கொள்வார். சில சமயம் சில ஐடியாக்களையும் கொடுப்பார். அது இயக்குனருக்கு பிடித்தால் ஓகே. இல்லையென்றால் அதை செய்யமாட்டார்.

சில சமயம் இயக்குனரை மீறி காட்சியில் ரஜினி ஒன்றை செய்தால் அது கண்டிப்பாக அந்த காட்சியை மெருகேற்றுவதற்காகவே இருக்கும். இந்த இடத்தில் ரசிகர்கள் கை தட்டுவார்கள் என ரஜினி கணித்தால் அது அப்படியே நடக்கும். அதனால்தான் இப்போது வரை சூப்பர்ஸ்டராக இருக்கிறார் ரஜினி.

ரஜினி பற்றி பேசியுள்ள வேட்டையன் பட இயக்குனர் தா.செ.ஞானவேல் ‘படத்தில் எப்படி வரப்போகிறோம் என்பதை ரஜினி சார் சரியாக புரிந்துகொள்வார். திடீரென அவருக்கு சந்தேகம் வரும். காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பார்த்தால் அவரின் வாய்ஸ் நோட் இருக்கும். இந்த சீன் இப்படி இருக்கு.. இப்படி மாத்தலாமா?’ என கேட்டிருப்பார். கீழ்ப்படிதல் உள்ள மாணவன் என பள்ளியில் எழுதுவார்கள். அவர் டைரக்டர்களிடம் அப்படித்தான் இருப்பார்’ என பேசியிருக்கிறார்.

Related Articles
Next Story
Share it