ஞானவேலை அதிரவைத்த ரஜினி!.. இது வேறலெவல்!.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா?!...

Vettaiyan: அடிப்படையில் பத்திரிக்கையாளராக இருப்பவர் ஞானவேல். விகடன் பத்திரிக்கையில் வேலை செய்தவர். அதன்பின் சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் கூட்டத்தில் ஒருவன். இந்த படத்தில் அசோக் செல்வன் நடித்திருந்தார்.

அதன்பின் 4 வருடங்கள் கழித்து ஜெய்பீம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் என்பது மட்டும்தான் ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது. ஞானவேல் யாரென்பதே பலருக்கும் தெரியவில்லை. ஆனால், ஜெய்பீம் படத்தை ஒரு தேர்ந்த இயக்குனர் போல இயக்கி அசத்தி இருந்தார் ஞானவேல்.

படத்தை பார்த்த பலரும் ஆச்சர்யப்பட்டனர். இந்த படம் பல விருதுகளையும் பெற்றது. பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றது. இப்போது ரஜினியை வைத்து வேட்டையன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ளது.

vettaiyan

காவல்துறையில் நடக்கும் என்கவுண்டர், அதன் பின்னணி பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் ரஜினி ஒரு கட்டத்தில் என்கவுண்டருக்கு எதிராக போராடுவது போல கதையை எழுதியிருக்கிறார் ஞானவேல். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷரா விஜயன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் வழக்கம்போல் பல விஷயங்களை பேசியியிருந்தார் ரஜினி. ரஜினி ஸ்டைலில் மட்டுமே கதை பண்ணாமல், என்னுடைய ஸ்டைலிலும் அவரை கொண்டு வராமல் இருவருக்கும் செட் ஆவது போல கதையை எழுதி இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார் ஞானவேல்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஞானவேல் ‘ரஜினி சார் கதையை படிக்க மாட்டார். நாம் சொல்லும்போது ஆழ்ந்து கேட்பார். கதை சொல்லி 2 நாட்கள் கழித்து முழுக்கதையை என்னிடம் சொன்னார். இரண்டரை மணி நேர கதையை ஒரு மணி நேரமாக சுருக்கி சொன்னார். ‘நீங்க சொன்னத சரியா உள்வாங்கி கொண்டேனா?’ என கேட்டார். இந்த திறமையில்தான் அவர் தன்னை மெருகேற்றிக் கொள்கிறார்’ என பேசியிருந்தார்.

Related Articles
Next Story
Share it