ஆரம்பிக்கவே இல்ல.. அலப்பறையை ஆரம்பித்த விஜய் ஃபேன்ஸ்!.. வீடியோ பாருங்க!..

by sankaran |   ( Updated:2024-10-27 04:36:38  )
vijay
X

தமிழக வெற்றிக்கழகம் மாநாடு இன்று (27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கிறது. இன்று மாலை நடக்க இருப்பதால் இப்போது இருந்தே ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

இப்போதே ரசிகர்கள் சேரை எல்லாம் தூக்கியபடி தடுப்புக் கம்பிகளை எல்லாம் தாண்டி அலப்பறை செய்து வருகின்றனர். ரசிகர்களுக்கு எவ்வளவோ கட்டுப்பாடுகளை கடந்த சில நாள்களாக விஜய் தெரிவித்து வந்துள்ளார். இரு சக்கர வாகனங்களில் வராதீங்க.

காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்க. சாலை விதிகளைப் பின்பற்றுங்க. மாநாடு காவல் படைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுங்கன்னு ரசிகர்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நிறைய அறிவுரைகளைத் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இப்போது கூட்டம் கூட்டமாகத் திரண்டு அங்கும் இங்கும் ஓடியபடி அலப்பறை செய்து வருகின்றனர் தவெக. தொண்டர்கள் என்பது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அவர்கள் மாநாட்டு முகப்பை நோக்கி ஓடி ஓடி வருகின்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கர்ப்பிணிகள், குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மாநாட்டுக்கு வராதீங்க. உங்க மனசுல நான் இருக்கேன். வீட்டுலயே இருந்து டிவியில பாருங்கன்னு விஜய் தன் ரசிகர்களின் நலம் விரும்பி அன்பாகத் தெரிவித்து இருந்தார்.

மாநாட்டுக்காகப் பார்த்துப் பார்த்து எல்லாருமே பிரமிக்கும் வகையில் முன்னேற்பாடுகளைச் செய்து இருந்தார். தண்ணீர் வசதி, பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதின்னு அட்டகாசமாக செய்து இருந்தார். இது தவிர காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார் என வீரப்பெண்மணிகளின் கட் அவுட்டுகளுக்கு நடுவே தான் இருப்பது போல வைத்து அசத்தியிருந்தார்.

மாநாட்டு முகப்பின் இருபுறமும் இரட்டை யானை அலங்கரித்தது. காண்போரைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் ரசிகர்கள் தொண்டர்களாவதற்கு முன்பே அலப்பறை தாங்கலையே என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

இது பற்றிய வீடியோ பாருங்க...

https://x.com/polimernews/status/1850354230571553037?t=dyvAG6zpxC-tt4d-Y6O9uQ&s=09

Next Story