Aaryan: நாளை 10 படங்கள் ரிலீஸ்!.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஆர்யன்!..
 
                                    
                                ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமையான நாளை 10 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவை என்னென்ன படங்கள் என பார்ப்போம் வாருங்கள்.
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஆர்யன். விஷ்ணு விஷால் ஏற்கனவே நடித்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்த ராட்சசன் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை பிரவீன் என்பவர் இயக்கியிருக்கிறார். தொடர்ச்சியான கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனை பிடிக்க போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் முயலும் கிரைம் திரில்லர் படமாக ஆர்யன் உருவாகி இருப்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் வெளியான டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அடுத்து ஜோ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடித்து உருவாகியிருக்கும் ஆண் பாவம் பொல்லாதது படமும் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தை கலையரசன் தங்கவேல் என்பவர் இயக்கியிருக்கிறார். அதேபோல் தடை அதை உடை, பரிசு, தேசிய தலைவர், ராம் அபுதுல்லா ஆண்டனி, மெசெஞ்சர், காந்தாரா படத்தின் ஆங்கில வெர்ஷன், சரண் இயக்கத்தில் அஜித் நடித்த அட்டகாசம் ரீ-ரிலீஸ், Bahubali Epic என மொத்தம் 10- திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ளது.
ஏற்கனவே, வெளியான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை இணைத்து ஒரே படமாக பாகுபலி எபிக் உருவாகியிருக்கிறது. சுமர் 4 மணி நேரம் ஓடும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.

