2024-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்.. கோடிகளில் புரளும் ஹீரோஸ்.. டாப் 10 லிஸ்ட்!..

by Ramya |
highest paid actors
X

highest paid actors

2024 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவடைய இருக்கின்றது. இந்த வருடத்தில் பல நடிகர்களின் படங்கள் வெளிவந்திருக்கின்றது. இந்த வருடம் பல நடிகர்களுக்கு ஹிட்டாகவும், பல நடிகர்களுக்கு தோல்வியாகவும் அமைந்திருக்கின்றது. இருப்பினும் இவர்கள் தங்களது சம்பளங்களை குறைத்துக் கொள்வது கிடையாது. அப்படி இந்த ஆண்டு பல கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகர்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

நடிகர் அக்ஷய் குமார்: பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் 80களில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார். இந்திய சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் இவர் ஒரு படத்திற்கு 145 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகின்றார். இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் 10வது இடத்தில் இருக்கின்றார்.

நடிகர் கமல்ஹாசன்: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமான இவர் தனது ஐந்து வயதில் இருந்து சினிமாவில் நடித்த வருகின்றார். சினிமாவில் ஏகப்பட்ட புது முயற்சிகளை செய்து அதில் வெற்றி கண்டவர். இதுவரை 220 படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகின்றார். இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் 9-வது இடத்தில் இருக்கின்றார்.


நடிகர் சல்மான்கான்: 1989 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்து வரும் சல்மான் கான் தற்போது இருக்கும் நடிகர்களுக்கு இணையாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த டைகர் திரைப்படத்திற்கு சுமார் 150 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கி இருக்கின்றார். இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கின்றார்.

நடிகர் அஜித்குமார்: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். திரைத்துறையை தாண்டி கார் பந்தயத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான துணிவு திரைப்படத்திற்காக 165 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கின்றார்.


நடிகர் பிரபாஸ்: தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக அறியப்பட்ட பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் புகழ்பெற்றிருக்கின்றார். இவர் தான் கடைசியாக நடித்த கல்கி 2898 படத்திற்காக 200 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கின்றார். இன்றைய சூழலில் அதிகபட்ச படங்களில் நடிக்கும் நடிகராக உருவெடுத்து இருக்கின்றார் நடிகர் பிரபாஸ்.

நடிகர் அமீர்கான்: பாலிவுட்டில் பிரபல நடிகராக அறியப்படும் நடிகர் அமீர்கான் ஒரு திரைப்படத்திற்கு 150 கோடியில் இருந்து 270 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகின்றது. இவரது நடிப்பில் வெளியான லால் சிங் தாதா திரைப்படத்திற்காக 250 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கின்றார்.

நடிகர் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு இணையாக போட்டி போட்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதிலும் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு படங்களில் படு பிஸியாக நடித்த வருகின்றார்.


கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் மற்றும் இந்த ஆண்டு வெளியான வேட்டையன் திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 270 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் 4- வது இடத்தில் இருக்கின்றார்.

நடிகர் ஷாருக்கான்: 1987 ஆம் ஆண்டு சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த ஷாருக்கான் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் பாட்ஷாவாக இருந்து வருகின்றார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் இரண்டுமே 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

சினிமா வரலாற்றிலேயே ஒரே வருடத்தில் இரண்டு ஆயிரம் கோடி வசூல் செய்த நடிகர் என்கின்ற பெருமையை பெற்றிருக்கின்றார். இவர் தனது கடைசி திரைப்படத்திற்காக 280 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கின்றார். இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கின்றார்.

நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்துடன் தனது சினிமா பயணத்தை முடித்துவிட்டு அரசியல் பயணத்தை தொடங்க இருக்கின்றார். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் நடிகர் விஜய் 275 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.


நடிகர் அல்லு அர்ஜுன்: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்ட அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்தின் மூலமாக உலகில் புகழ்பெற்றிருக்கின்றார். இந்த திரைப்படம் வெளியாகி குறுகிய நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்திருக்கின்றது. நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகராக இருக்கின்றார்.


இவர் கடைசியாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு 300 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கின்றார். இவர்தான் நடப்பு ஆண்டில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றார்.

Next Story