2025-ன் முதல் பாதியில் வரவிருக்கும் டாப் ஹீரோ படங்கள்!.. லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே!..

by Ramya |
2025movies
X
2025movies

2024 ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடிவடைய இருக்கின்றது. இந்த ஆண்டு பல ஹீரோக்களின் படங்கள் வெளியாகி இதில் பல படங்கள் ஹிட் கொடுத்துள்ளது, பல படங்கள் தோல்வியை கொடுத்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்கின்ற முயற்சியில் நடிகர்கள் பிஸியாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல் பாதியில் ரெடியாக இருக்கும் படங்களின் லிஸ்ட்டை தெரிந்து கொள்வோம்.

விடாமுயற்சி: நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்: நடிகர் தனுஷ் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்ற திரைப்படம். இப்படம் பிப்ரவரி மாதம் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பும் இருக்கின்றது.

சூர்யா 44: நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் கடைசியில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

இட்லி கடை: நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இட்லி கடை. தவான் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கும் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கின்றார். படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கின்றது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது.


மே மாதம் போட்டிபோடும் படங்கள்:

மே மாதம் விடுமுறை நாட்கள் என்பதால் அந்த மாதத்தில் ஏகப்பட்ட திரைப்படங்கள் போட்டி போடுகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை மே மாதம் ரிலீஸ் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படமும் மே மாதம் தான் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 திரைப்படமும் மே மாதம் ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் மே மாதம் பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் அணிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக் லைப்: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் திரைப்படம் தக் லைப். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. பல வருடம் கழித்து கமலஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருவதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story