பிரசாந்தோட வாழ்க்கையை படமா எடுத்தா விதியையே மிஞ்சிடுமாம்...!

பிரசாந்த், கிரகலட்சுமி வாழ்க்கையில் கருத்து வேறுபாடு உண்டாகி விவாகரத்துல முடிந்தது. இது அவரோட திரை வாழ்க்கையில் பெரிய இடைவெளியை உண்டாக்கியது. ஆனால் இவரது பிரச்சனையைப் படமாக்கினால் விதியை விட மேலாக வேற லெவல் தான் என்கிறார் ஒரு பிரபலம். என்ன சொல்றாருன்னு பாருங்க.

விவாகரத்து ஈசியா கிடைக்கணும்னா அவளுக்கு வேற ஒரு தொடர்பு இருக்கு. அவள் எங்கூட படுக்க மாட்டேங்கறான்னு சொல்வாங்க. அல்லது இதே பிரச்சனையைப் பெண் சொல்லலாம். இதற்கு ஒன்றுமே சொல்ல முடியாது. அதைத் தாண்டி வாரிசு இல்லாமப் போயிட்டுன்னா ஈசியா விவாகரத்து கிடைக்கும்.

முதல்ல என்ன சொல்றதுன்னா அவங்களுக்கு வேற ஏதாவது தொடர்பு இருக்கான்னு தான் கேட்பாங்க. முதல் திருமணம் நடந்த வகையில் அந்தத் தம்பி நீண்ட பேட்டி கொடுத்துருந்தாரு. நானும், கிரகலட்சுமியும் படிக்கும்போது ரெண்டு பேரும் விரும்பினோம். அவங்க அனுமதியோடு அவங்க வீட்ல போய் பேசலாம்னு போனேன்.


அவங்க வீட்டோ கேட்டைப் பார்த்ததும் அதுதான் என் வீட்டோட மதிப்பு. அதைப் பார்த்ததும் இவ்ளோ பெரிய வசதியான ஆளை நாம கட்ட முடியாதுன்னு நினைச்சேன். அவங்க அப்பாகிட்டயும் எதையும் பேசல. இந்தப் பொண்ணை நம்மால வசதியா வச்சிக்க முடியாது. காதல் என்ற ஒரே காரணத்துக்காக அவளைக் கூண்டுக்குள்ள அடைக்க விரும்பல.

அதுதான் ட்ரூ லவ்வுங்கறது. ஏன்னா அவ்ளோ செல்வந்தர் குடும்பம். இவரும் அங்க அடிமையாகப் போக முடியாது. ஆனா எப்பவோ நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தூண்டுதல் பண்ணி இவங்களுக்கு பதிவு திருமணம் செய்து வச்சிட்டாங்க. அப்போ ரொம்ப கெடுபிடி கிடையாது. அதை வெளியே காட்டிக்காமலே இருந்துருக்காங்க.

நம்ம அவசரப்பட்டுட்டோமேன்னு நினைச்சார். ஆரம்பத்துல இரண்டு குடும்பத்துக்கும் தெரியலை. அதுக்கு அப்புறம் தான் தெரிய வந்ததாம். ஒரு தேர்தல் மூலமா ஆய்வு செய்யும்போது தெரிய வந்ததாம். அப்புறம் நீதிமன்றம் டைவர்ஸ் கொடுத்துருச்சு. அந்தத் தம்பியும் கிரகலட்சுமிக்கும், எனக்கும் காதல் தானே தவிர உடல்ரீதியா எந்தத் தொடர்பும் கிடையாதுன்னு சொல்லிருக்காரு. அது ரொம்ப உருக்கமான விஷயம்.

பிரசாந்தோட லைஃபை படமா எடுத்தாலே விதி படத்தை விட மேலாக வேற லெவலில் ஓடும். ஆனா பிரசாந்தை வில்லனா காட்ட முடியாது. அவரை இன்னோசென்ட்டா தான் காட்ட முடியும். அந்தத் தம்பியையும் இன்னோசென்ட்டா தான் காட்ட முடியும். அந்த ஏழு நாள்கள் மாதிரி. இதுல யாரையுமே கெட்டவனா காட்ட முடியாது. அப்படி ஒரு கதை தான் இது.

வில்லனே இல்லாத படம் எடுக்கணும்னா பிரசாந்தோட வாழ்க்கையை வச்சி எடுத்துடலாம். அவரு டைவர்ஸ் கேட்குறாரு. அவ்ளோ தான். குடும்பப் பிரச்சனை. மனைவி மேல அதிருப்தி. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it