Categories: Cinema News Trailer

ஒரே ஒரு தம்பியை வச்சிக்கிட்டு நான் படுற பாடு… பிரதர் படத்தின் பக்கா டிரெய்லர்…

Brother: நடிகர் ஜெயம்ரவியின் நடிப்பில் தீபாவளி ரேஸில் இருக்கும் பிரதர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரதர். இப்படத்தில் ஜெயம் ரவி, பூமிகா, பிரியங்கா மோகன், நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் தீபாவளி ரேஸில் வெளியாக இருக்கிறது.

பிரின்ஸ் புரோடக்‌ஷன் கம்பெனி தயாரிப்பில் 2022ம் ஆண்டு ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஹரிஷ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் ரசிக்கப்பட்டது.

இருந்தும் பால்டப்பா பாடிய மக்கா மிஷி பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஹிட்டடித்தது. தம்பியாக ஜெயம்ரவி அக்காவாக பூமிகா நடிக்க அவர்களை இக்கதை வலம் வரும் எனக் கூறப்பட்ட நிலையில் இன்று டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

பொறுப்பில்லாமல் இருக்கும் தம்பி ரவிக்காக அக்கா பூமிகா தன் கணவர் நட்ராஜை எதிர்க்கும் விதமாகவே கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி ரேஸில் ஏற்கனவே வெற்றி இடத்தில் இருக்கும் அமரனுக்கு பிரதர் பக்கா போட்டியாக இருக்கும் எனப் பேசப்பட்டு வருகிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்