விஜய் சேதுபதியின் டிரெயின் படத்தின் கதையை மேடையில் உளறிய மிஷ்கின்… பேசவிட்டதுக்கு நல்லா செஞ்சிட்டீங்கப்பா!

Vijay Sethupathi: மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் டிரெயின் படத்தின் மொத்த கதையும் கிளைமேக்ஸ் வரை மேடையில் உளறி கொட்டி இருக்கிறார் படத்தின் இயக்குனரான மிஷ்கினே.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டிரெயின். இப்படத்தினை மிஷ்கின் இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிஷ்கினே இப்படத்துக்கு இசையமைக்க இருப்பதும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி உள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, நாசர், ஸ்ருதி ஹாசன், நரேன், சாஜி, கே.எஸ்.ரவிகுமார், கலையரசன், பப்லு உள்ளிட்டோர் முன்னணி கேரக்டரில் நடித்து வருகின்றனர். இதற்கு முன்னர் மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து இருவரின் கூட்டணியின் தற்போது முழு நீள படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் ஜனவர் 16 விஜய் சேதுபதியின் பிறந்தநாள் தினத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது. மகாராஜா மற்றும் விடுதலை2 வெற்றிக்கு பின்னர் விஜய் சேதுபதியின் அடுத்த படமாக டிரெயின் ரசிகர்களிடம் ஆர்வத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் ஒரு மேடையில் பேசிய மிஷ்கின் கதையின் மொத்த ரகசியத்தினையும் உடைத்து விட்டார். நான் டிரெயினில் 600 முறை போயிருக்கேன். அதில் போகும் போது எப்படி இருக்கும் என்றால் ஒரு பெரிய ராட்ச புழு பெரிய பிள்ளைகளை சுமந்து கொண்டு நகர்ந்து நகர்ந்து துப்புகிறது.
பத்திரமாக கொண்டு போய் விடுகிறது. அது ஒரு பயணம். என்னுடைய கதையில 1000 பேர் அந்த புழுவான டிரெயினில் ஏறுகின்றனர். பாதியிலேயே பலர் இறந்து விடுகின்றனர். அப்போது கதாநாயகன் வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்து விட்டு இறப்பை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு வாழ்க்கையில் தற்போது எதுமே இல்லை.
அப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் ஹீரோ அந்த டிரெயினில் ஏறுகிறான். தன்னுடைய மனைவியின் கல்லறையில் போய் பூவை வைத்துவிட்டு செத்து விடலாம் என நினைக்கிறான். அப்பொழுது டிரெயினில் நிறைய விஷயங்கள் நடக்கிறது. அதில் அவனும் ஈடுபட்டு போய் தன்னை மறந்து வெளியில் இறங்கும் போது அந்த அனுபவம் அந்த பயணம் ஒரு வாழ்க்கையை கத்து தருது.
அது எப்படியாப்பட்ட வாழ்க்கையை கத்து தருதுனா இன்னைக்கு இந்த டிரெயினில் நான் பயணம் செய்யலைனா என் வாழ்க்கை நாசமா போய்ருக்கும். மோசமா போய்ருக்கும். இந்த பயணம் என் வாழ்க்கையை கற்று தருதுனு சொல்றான். அதுதான் கடைசி கிளைமேக்ஸ் என டிரெயின் படத்தின் கதையையே சொல்லி விட்டார்.