Arasan: ரஜினிக்கு தளபதி.. சிம்புவுக்கு அரசன்... ஹைப் ஏத்தும் பிரபலம்..
Arasan: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அரசன். இந்த படத்தின் வேலைகள் ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கியது. சிம்பு வைத்து புரமோஷூட் எல்லாம் நடத்தினார் வெற்றிமாறன். ஆனால் சில காரணங்களால் பட வேலைகள் நிறுத்தப்பட்டது. அதன் பின் பேசி தீர்க்கப்பட்டு தற்போது பட வேலைகள் மீண்டும் வேகமெடுக்க துவங்கியிருக்கிறது. அரசன் படத்தின் புரமோஷன் வீடியோ நேற்று மாலை தமிழகத்தில் பல முக்கிய தியேட்டர்களிலும் வெளியானது. சுமார் 5 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை தியேட்டரில் பார்த்த சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் அரசன் படம் புரோமோ வீடியோ வெளியான ஒரு தியேட்டரில் செய்தியாளர்களிடம் பேசிய தியேட்டர் அதிபர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ‘தியேட்டர்ல ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் சூப்பரா இருக்கு.. வெற்றிமாறன் தனுஷை வச்சி வடசென்னை இயக்கி ஹிட் கொடுத்தாரோ கண்டிப்பா அசுரன் படத்தையும் அவர் ஹிட் படமா குடுப்பாருன்னு நான் நம்புறேன். சிம்புவுக்கு இந்த படம் ஹிட் படமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள். ரஜினி சாருக்கு தளபதி போல சிம்புவுக்கு அரசன் படம் அமையும்.
சிம்பு வருஷத்துக்கு ஒரு படம் நடிக்கணும்னு ஆசைப்படுறேன். அவர் ரொம்ப செலக்ட் பண்ணிதான் நடிச்சிட்டு இருக்காரு. தாணு எப்பவுமே படத்தை புதுசா புரமோஷன் பண்ணுவாரு. வெற்றிமாறன் இதுவரைக்கும் தோல்வி படமே கொடுத்ததில்லை. சிம்புவும் லிட்டி சூப்பர்ஸ்டாரா சினிமால அறிமுகமாகி இப்பவும் தன்னுடைய இடத்தை தக்க வச்சிட்டு இருக்காரு.
இதுக்கு மேல அனிருத்தோட இசை எல்லாம் சேர்ந்து கண்டிப்பா அரசன் படம் ஒரு ஹிட் படமாக அமையும் என நம்புறேன். அரசன் படத்தோட ஆடியோ லான்ச்சையும் தியேட்டரில் லைவா ஒளிபரப்பது பற்றி பேசிட்டு இருக்கோம். ஏன்னா ஒரு இடத்தில் ஆடியோ லான்ச் வச்சா 5 ஆயிரம் பேர்தான் வருவாங்க. ஆனா இதே தியேட்டரில் போட்டால் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்ப்பாங்க. அது நடக்கும்னு நம்புகிறேன்’ என பேசி இருக்கிறார்.
