2 படம் மட்டும்தான் ஹிட்டு!. வேற காட்டுங்க!.. சூர்யா மீது காண்டாகும் திருப்பூர் சுப்பிரமணியன்!..

surya
சில நடிகர்களுக்கு தொடர் தோல்வி என்பது சில வருடங்கள் இருக்கும். அதன்பின் ஒரு ஹிட் கொடுப்பார்கள். மீண்டும் தோல்விப் படம் அமையும். ஒரு நடிகருக்கு எல்லா திரைப்படங்களுமே வெற்றிப்படங்களாக அமையும் என சொல்ல முடியாது. வசூல் மன்னன், சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட ரஜினிக்கே பாபா, லிங்கா, தர்பார், அண்ணாத்த, வேட்டையன் போன்ற படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
ரசிகர்களுக்கு பிடிக்காவிட்டால் எப்படிப்பட்ட நடிகராக இருந்தாலும் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவும், எம்.ஜி.ஆரே சில தோல்விகளை பார்த்திருக்கிறார். இதிலிருந்து எந்த நடிகரும் தப்ப முடியாது. நடிகர் சூர்யாவின் படம் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கம் 2-வுக்கு பின் ஒரு சூப்பர் ஹிட் படம் அவருக்கு அமையவே இல்லை.
சூர்யா நடித்து வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் வெற்றிப்படங்கள்தான். ஆனால், அவை ஓடிடியில் நேரடியாக வெளியானது. மற்றபடி காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா போன்ற படங்கள் வெற்றியை பெறவில்லை. கங்குவா படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என சூர்யா எதிர்பார்த்தார். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
அதன்பின் கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் அவர் நடித்த ரெட்ரோ படம் மே 1ம் தேதி வெளியானது. இந்த படம் வெற்றி என படக்குழு அறிவித்து சச்கஸ் மீட் எல்லாம் கொண்டாடினார்கள். ஆனால், படம் வெளியாகி 3 நாட்கள் மட்டுமே தியேட்டரில் கூட்டம் இருந்தது. படம் நஷ்டம் என சிலர் சொல்கிறார்கள்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வினியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் ‘சூர்யா தனது 2 படங்களை ஓடிடியில் வெளியிட்டார் என்கிற கோபத்தில் அவருக்கு எதிராக நீங்கள் பேசுவதாக சூர்யா ரசிகர்கள் கருதுகிறார்களே என கேட்டதற்கு ‘என் மீது கோபப்பட என்ன இருக்கிறது?. அவர் ஓடிடியில் வெளியிட்ட 2 படங்களை தவிர தியேட்டரில் வெளியான எந்த படம் ஹிட் என சொல்லுங்கள். எதுவுமே லாபம் இல்லை.
அவர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை. சிவக்குமார் எனக்கு அண்ணன் போன்றவர். என் ஊர்க்காரர். ஆனால், உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். சூர்யாவின் படத்தை தியேட்டரில் வெளியிடமாட்டோம் என அப்போது கோபத்தில் சொன்னேன். ஆனால், அவரின் எல்லா படங்களையும் அதிக தியேட்டரில்தான் வெளியிட்டோம். எந்த பிரச்சனையும் செய்யவில்லை. ரெட்ரோவுக்கும் அதிக தியேட்டர்கள் ஒதுக்கினோம். சூர்யா ரசிகர்கள் என் மீது கோபப்பட்ட ஒன்றுமில்லை’ என பேசியிருக்கிறார்.