சக்சஸ் மீட் வச்சி யாரை ஏமாத்துறீங்க?!.. புது படங்களை கிழிக்கும் திருப்பூர் சுப்பிரமணியம்!...

by MURUGAN |   ( Updated:2025-05-11 05:22:30  )
retro
X

சினிமாவில் ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பது படத்தை தயாரித்த தயாரிப்பாளர், படத்தை வாங்கி வினியோகம் செய்த வினியோகஸ்தர்கள், தியேட்டரில் ரிலீஸ் செய்த தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். ஆனால், ரசிகர்களும், மூவி டிராக்கர்களும் பொய்யான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். டிராக்கர்ஸ் பதிவிடும் தகவல்களை உண்மை என நம்பி ரசிகர்களும் பகிர்கிறார்கள்.

குறிப்பாக தோல்விப்படங்களை கூட வெற்றி என்பது போல சித்திரிக்கிறார்கள். இது கடந்த சில வருடங்களில் அதிகரித்துவிட்டது. இதில், ஆச்சர்யம் என்னவெனில் படம் வெளியாகி 2வது நாளிலேயே அந்த படத்தி; நடித்த ஹீரோவுக்கு ஆளுர மாலை போட்டும், கேக் வெட்டியும் தயாரிப்பாளர் வெற்றி விழாவை கொண்டாடுகிறார்.


இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய வினியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ‘இப்போதெல்லாம் நடிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள். விடாமுயற்சியும், வீர தீர சூரனும் வெற்றிப்படமே இல்லை. அந்த படங்கள் வசூலை தரவே இல்லை.


ஆனால், வீர தீர சூரன் வெற்றிப்படம் என சொல்லி ஆளுர மாலையை எஸ்.ஜே.சூர்யாவுக்கு போடுகிறார்கள். அவர் என்ன நினைப்பார். ‘நம் படம் சூப்பர் ஹிட் போல’ என நினைப்பார். அவரையும் ஏமாற்றி ரசிகர்களையும் ஏமாற்றுகிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவெனில் வீர தீர சூரனை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தருக்கே அது தோல்விப்படமென தெரியும். ஆனால், மாலையை வாங்கிக்கொண்டு போகிறார்.


அமரன், விக்ரம் போன்ற படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடினார்கள். அந்த படங்கள் வசூலை பெற்றது. குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுங்கள். ஆனால், ஓடாத படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடி ஏன் எல்லோரையும் ஏமாற்றுகிறீர்கள்?. சமீபத்தில் கூட ஒரு ஹீரோ கேக் வெட்டி சிரித்த முகத்துடன் வெற்றியை கொண்டாடினார். ஆனால் அப்படம் வெற்றியே இல்லை. படம் வெளியாகி 3 நாட்களில் இவர்கள் கேக் வெட்டி சக்சஸ் மீட் கொண்டாடுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என பொங்கியிருக்கிறார்.

Next Story