நடிக்க விடல.. லைஃப்ல நடந்த மேஜிக்.. திரிஷாவின் இன்னொரு பக்கம்

trisha
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் ரசிக்ர்களை உற்சாகப்படுத்தி வருபவர் நடிகை திரிஷா. கோலிவுட் குயின் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரிஷா இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று ரிலீஸாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
படத்தில் திரிஷா சிம்புவுக்கு ஜோடியாக இருப்பார் என்று பார்த்தால் கமலுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் தான் சிம்புவும் திரிஷாவும் மறுபடியும் இணைந்திருக்கின்றனர். அதனால் மீண்டும் அந்த ஒரு மேஜிக் நடக்குமா என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் சர்ப்ரைஸாக இருந்தது.
விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த திரிஷா மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். 96 படத்திற்கு பிறகு சில காலம் அவரை சினிமாவில் பார்க்க முடியாமல் போனது. ஒரு அழகு பதுமையாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் திரிஷா.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பேக் டு பேக் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். எந்த ஹீரோக்களுடன் இணைந்து ஆரம்பத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தாரோ இப்போது மீண்டும் அதே ஹீரோக்களுடன் தனது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். அஜித்துடன் குட் பேட் அக்லி படம் பெரிய ஹிட். சூர்யாவுடன் சூர்யா 45 படத்திலும் நடித்து வருகிறார். இப்போது தக் லைஃப் படம்.
trisha
இந்த நிலையில் திரிஷா தனது சினிமா பயணம் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது சிம்பு, கமல் எல்லாருமே குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தனர். ஆனால் என்னுடைய வீட்டில் என்னை முதலில் நடிக்க அனுமதிக்கவில்லை. நான்தான் ஆர்வத்தில் நடிப்பேன் என அடம்பிடித்தேன். லேசா லேசா படத்தில் நடிக்கும் போது இந்தப் படம் வொர்க் அவுட் ஆகலைனா மீண்டும் படிப்பை தொடரு என என் அம்மா சொன்னார். அது மட்டும் வொர்க் அவுட் ஆகாமல் இருந்துச்சுனா நான் சைக்காலஜிஸ்ட் ஆகியிருப்பேன் என திரிஷா கூறினார்.