அவருக்கு ஜோடியாக நான் நடிக்க முடியாது… ராஜமெளலி படத்துக்கே நோ சொன்ன திரிஷா…

by Akhilan |
Trisha
X

Trisha: நடிகை திரிஷா பிரபல இயக்குனர் ராஜமெளலியின் படத்திலேயே கூட நடிக்க முடியாது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது.

மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு நடிகை திரிஷா 90களின் கடைசியில் நடிக்க வந்தார். ஜோடி படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு குவிந்தது. மௌனம் பேசியதே, லேசா லேசா உள்ளிட்ட சின்ன பட்ஜெட் படங்களில் கூட திரிஷாவின் நடிப்பால் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டார். திடீரென அவருக்கும் தெலுங்கு நடிகருமான ராணா டகுபதிக்கும் காதல் உருவானது. ஆனால் பெரிய குடும்பத்தை சேர்ந்த ராணா தரப்பு இதை வெறுத்தது.

அவர்கள் காதல் பிரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திரிஷாவின் சினிமா கேரியரும் மொத்தமாக அழிக்கப்பட்டது. பெரிய ஹீரோக்களுடன் நடிக்க முடியாமல் போனது. இருந்தும் தனி நாயகியாக சில படங்களில் நடித்து வந்தாலும் அவரால் விட்ட இடத்தை பிடிக்க முடியவில்லை.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அவருக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் கிடைத்தது. தொடர்ச்சியாக லியோ, விடாமுயற்சி படங்களில் நாயகியாக நடித்து தன்னுடைய இடத்தினை மீண்டும் பிடித்து இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் ராஜமெளலி தன்னுடைய ஆரம்பங்காலங்களில் சின்ன சின்ன படங்களை இயக்கி வந்தார். அவர் இயக்கத்தில் உருவான ஒரு படம் தான் மர்யாத ரமன்னா. இப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. தற்போது காமெடி நடிகராக இருக்கும் சுனிலுடன் சலோனி நடித்திருந்தார்.

ஆனால் முதலில் இக்கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைக்க வேண்டும் என விரும்பிய ராஜமெளலி அவரிடம் பேசி இருக்கிறார். ஆனால் சுனிலுடன் தான் ஜோடியாக நடிக்க முடியாது என திரிஷா மறுத்துவிட்டாராம். ஆனால் அதை தொடர்ந்து சில நாட்களில் தான் திரிஷா தன்னுடைய இடத்தினை இழந்தார்.

ஆனால் அப்போது ஹிட் ஹீரோவாக இருந்த சுனில் பின்னர் வில்லன் அவதாரம் எடுத்து தற்போது தமிழ் உள்ளிட்ட நிறைய மொழி படங்களில் காமெடி நடிகராக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story