சின்ன வயசு விஜய் செம க்யூட்!.. TVK வெளியிட்ட வைரல் போட்டோஸ்!.. கேப்ஷன் பாருங்க!...

TVK Vijay: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஜய். ஆனால், சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போவதாக அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதேநேரம், இன்னமும் அவர் முழு அரசியல்வாதியாக மாறவில்லை.

கோட் படத்திற்கு பின் விஜய் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது. அதேநேரம், அந்த கதையை அப்படியே எடுக்காமல் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.

மேலும், விஜய் அரசியலுக்கு போய்விட்டதால் படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகளையும் வைத்திருக்கிறார்கள். விஜய் நடிக்கும் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் தற்போது மற்ற காட்சிகள் வினோத் எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட ஈரோடு, சிவகங்கை பகுதிகளில் தேர்தல் தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். படம் 2026 பொங்கலுக்குதான் ரிலீஸ் என்பதால் நிதானமாக பட வேலைகள் நடந்து வருகிறது.

நடிகர் விஜய் வீட்டில் செல்ல பிள்ளையாக வளர்ந்தவர். லயோலா கல்லூரியில் படிக்கும்போது படிப்பை விட்டுவிட்டு அப்பாவிடம் அடம்பிடித்து சினிமாவுக்கு வந்தார். நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் நடிக்க துவங்கிய விஜய் அதன் பின் அப்பா இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்தார். அது பெரிதாக கிளிக் ஆகாத நிலையில் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் அவரை கவனிக்க வைத்தது.

அதன்பின் துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, கில்லி போன்ற படங்களின் மெகா வெற்றி விஜயை முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக மாற்றியது. இப்போது 225 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சிக்கும் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே தொடர்ந்து சினிமாவில் நடிப்பதா வேண்டாமா என முடிவெடுப்பார் என்கிறார்கள்.

இந்நிலையில், விஜய் சிறுவனாக இருக்கும்போது எடுக்கப்பட சில புகைப்படங்களை தவெகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘எதிர்கால முதலமைச்சர்’ என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
