Categories: Cinema News latest news

Tvk Stampede: விஜயை குறை சொல்வது சரியில்லை… இந்த சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க… எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. 

தவெக சார்பில் வாரம் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் கூட்டங்கள் சரியாக நடந்து முடிந்து விட்டது. 

நேற்று நாமக்கல் மாவட்டத்தில் விஜய் பேசி இருந்தார். தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் அவர் பேச இரவு ஆகிவிட்டது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டனர். 10 ஆயிரம் அனுமதி கோரப்பட்டு இருந்த நிலையில் 30 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். 

இதில் நடந்த நெருக்கடியில் இதுவரை 39க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து தவெக மீதும், விஜய் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஆளும்கட்சி தரப்பு கூட விஜய் மீது குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது வைரலாகி வருகிறது. விஜயிற்கு எதாவது அறிவுரை கூற விரும்புகிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இது மாதிரி சூழலில் ஒரு அரசியல் கட்சித்தலைவர் இன்னொரு கட்சித்தலைவருக்கு அறிவுரைகள் வழங்குவது சரியான விஷயம் இல்லை. 

விஜய் ஏன் இன்னும் வந்து பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடந்து இருப்பது மிக மிக துயர சம்பவம். இந்த நேரத்தில் யார் யார் என்ன மனநிலையில் இருப்பார்கள் என யோசிக்க முடியாது. அரசியலை கடந்து எல்லாரும் சிந்திக்க வேண்டிய நிலை.

தவெக நடத்திய முந்தைய கூட்டத்தை கணக்கில் வைத்து தமிழக அரசு முழு பாதுகாப்பை வழங்கி இருக்க வேண்டும். கூட்டம் நடக்கும் போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டதால் நடந்த தள்ளுமுள்ளு காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வருகிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily