TVK Vijay: திருச்சி திணற.. அரியலூர் அலற.. பெரம்பலூர் பதற… TVK தலைவரின் முதல் சம்பவம்!..
TVK Vijay: தவெக தலைவர் விஜயின் முதல் சுற்றுப்பயணத்தின் அடுத்தக்கட்ட பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய மதுரை மாநாட்டில் மக்களை நேரில் சந்திக்க வருகிறேன் என பேசி இருந்தார். அந்த மாநாட்டின் போதே விஜயின் அடுத்த திட்டம் மக்களை நேரில் சந்திக்க இருப்பது என்பதாகவே தகவல்கள் வெளியானது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் விஜய் செய்ய இருக்கும் நிலையில் அவருடைய பயண விவரம் வெளியானது. வேலை நாட்களில் யாருக்கும் தொல்லை கொடுக்க கூடாது என்பதால் தன்னுடைய மொத்த சுற்றுப்பயணத்தையும் சனிக்கிழமையில் பிளான் செய்து இருக்கிறார்.
அந்த வகையில் நேற்று காலை திருச்சியில் முதல் மக்கள் சந்திப்பு நடந்தது. முதல் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அலைகடலென கூடினார். அதை தொடர்ந்து அரியலூர் வர வேண்டும். ஆனால் அத்தனை கூட்டத்தை கடந்து அவர் வருவதற்கு பெரிய போராட்டமே நடந்தது.
அரியலூரில் மாலையை தாண்டிவிட்டது. பல மாதங்களாகவே விஜய் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியில் வர மாட்டார் என பல குற்றச்சாட்டுகள் இருந்தது. அதை முறியடிக்கும் விதமாக அரியலூரை முடித்த கையோடு பெரும்பலூர் பயணம் செய்தார்.
இரவு 11 மணியை தாண்டியும் மக்களை சந்தித்து வந்து இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலுமே ஆயிரக்கணக்கானவர்கள் கூடி இருந்தது பார்ப்பவருக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் விஜய் எங்குமே முகம் சுழிக்காமல் தன்னுடைய ரசிகர்களின் நலன் கருதி நடந்துக்கொண்ட விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்த மூன்று மாதத்திற்கு விஜயின் திட்டமும் பக்காவாக பிளான் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அடுத்த வாரம் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் பயணம் செய்ய இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தவெகவிற்கு வரவேற்பு கூடிக்கொண்டே செல்வதை தான் பார்க்க முடிகிறது.
