அண்ணனுக்கு என்னதான் ஆச்சு? ஆரம்பமே குழப்பமா? ஆளுநர் சந்திப்பால் விமர்சனத்தில் சிக்கிய தவெக தலைவர்
Vijay: தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தற்போது தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நேரில் சந்தித்து இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் விஜய் தன்னுடைய இடத்தை அப்படியே விட்டுவிட்டு அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக்கழகம் என பெயர் வைத்ததிலிருந்து கட்சியை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
தற்போது தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக கூட தவெக வரலாம் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முதல் மாநில மாநாட்டில் விக்கிரவாண்டியில் விஜய் பேசிய பேச்சுக்கள் ரசிகர்களிடம் வைரலானது. அந்த கூட்டத்தில் விஜய், தமிழகத்திற்கு ஆளுநர் பதவியே வேண்டாம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆளுநரை நேரில் சந்தித்து பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட சமூக பிரச்சனைக்காக மனு கொடுத்திருக்கிறார். தற்போது மட்டும் எப்படி தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய் ஆளுநரை நம்புகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சந்திப்பில் தலைவர் விஜய்யுடன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் இருந்தனர். சில நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் சமூக பிரச்சினைக்காக விஜய் பேசியதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையும் முடிந்து சில நாட்கள் விஜயிடமிருந்து எந்தவித பதிவும் வெளியாகாமல் இருந்தது. அது மட்டும் அல்லாமல் விஜயகாந்தின் நினைவஞ்சலையில் அவர் கலந்து கொள்ளாமல் போனதும் ரசிகர்களிடம் அதிர்வலைகளை கிளப்பி இருந்தது.
இதை சமன் செய்யும் விதமாக விஜய் இன்று காலை பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதி ஆதரவு கொடுத்த நிலையில், இந்த திடீர் சந்திப்பு நடந்திருக்கிறது. ஆனால் வாசலில் அவரிடம் பேச காத்திருந்த செய்தியாளர்களை கண்டு கொள்ளாமல் வெறும் கையை மட்டும் அசைத்து விட்டு கடந்து சென்றார்.