TVKVijay: தவெகவிற்கு எதிராக செய்யப்படும் பித்தலாட்டம்… ஜெமினியை வச்சு பிராடு செய்யும் கூட்டம்…
TVKVijay: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழக சுற்றுப்பயணம் நடந்து வரும் நிலையில் திடீரென ஒரு நெகட்டிவ் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
விஜயின் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. தற்போது சனிக்கிழமை தோறும் ஒவ்வொரு மாவட்டத்துக்கு நேரடியாக சுற்றுப்பயணம் செய்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் திருச்சியிலும், நேற்று நாகையிலும் பேசி இருந்தார்.
முதல் வாரமே திருச்சியில் பெரிய திரளான கூட்டம் கூடியது. கிட்டத்தட்ட 11 மணிக்கு திருச்சியை நெருங்கிவிட்டாலும் அன்று மாலை தான் அவரால் அரியலூரே நெருங்க முடிந்தது. அதை போல திட்டமிட்டது போல பெரம்பலூரும் போக முடியவில்லை.
எக்கசக்கமான கூட்டம் அலைமோதியதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அதை பார்த்து பல எதிர்கட்சிகளும் விஜயிற்கு எதிராக அவரை விமர்சித்து வருகிறார்கள். இதையடுத்து அந்த பிரச்சாரத்தை நீர்த்து போக செய்ய பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் நாகையிலும் விஜயின் பிரச்சாரத்துக்கு கூட்டம் அலைமோதியது. ஆனால் நேற்றில் இருந்தே இணையத்தளத்தில் எதிர்கட்சியினர் பலரும் விஜயின் கூட்டத்தை கேலி பேசும் விதமாக விஜயின் கூட்டத்தை கேலி பேசி வருகின்றனர்.
அதிலும் ஒரிஜினல் கூட்டத்தை ஏஐ எனக் கேலி பேசி ஒரிஜினல் என ஏஐ போட்டோவை போட்டு பரப்பி வருகின்றனர். ஆனால் இணைக்கப்பட்ட போட்டோவில் ஒரிஜினல் என கூட்டம் இல்லாமல் காட்டப்பட்ட படத்தினை தான் ஏஐயில் எடிட் செய்துள்ளனர்.
லோகோ அதில் இருக்க அதை தவெக படை சரியாக கை காட்டிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் கடந்த 24 மணி நேரத்தில் ஏகப்பட்ட பதிவுகள் விஜயின் கூட்டத்தில் ஆளே இல்லை என பரப்பி வருவதே சந்தேகத்தை கிளப்பி வருகிறது. இதையும் தவெகவினர் ஆதாரத்துடன் உடைத்து விடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
