Categories: Cinema News Gossips

பாதுகாத்த ரகசியத்தை உளறி கொட்டிய உதயநிதி.! கடும்கோபத்தில் சிவகார்த்திகேயன்.?!

டாக்டர் , டான் என இரு சூப்பர் ஹிட் படங்களை சரியான நேரத்தில் கொடுத்து தமிழ் சினிமாவின் ஆபத்பாந்தவனாக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்.  மேலும், சிவகார்த்திகேயனுக்கும் இந்த வெற்றி ஒரு முக்கிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது.

அதாவது, சிவகார்த்திகேயன் மாஸ் ஆக்சன் என வித்தியாசமான முயற்சி செய்த சீமராஜா, ஹீரோ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வேலைக்காரன் படம் கூட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் தற்போது முழுக்க முழுக்க காமெடி கதைக்களங்களை தேர்வு செய்து அதில் தன்னால் முடிந்த ஆக்சன், எமோஷன்களை காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன் அதுவும் அவருக்கு நன்றாகவே கைகொடுத்து வருகிறது.

அவர் அடுத்ததாக, தெலுங்கு இயக்குனர் அனுதீப்  இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தான் தயாரித்து வருகிறார். அதே போல, கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும் நடித்து நடித்து வருகிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன் – என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.! மீளா துயரத்தில் விஜய் குடும்பம்.! சோகத்தில் ரசிகர்கள்.!

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘ சிவகார்த்திகேயன் அடுத்து ஒரு படம் நடித்து வருகிறார். நேற்று அதன் தலைப்பை கூறினார். ‘மாவீரன்‘ தான் படத்தின் தலைப்பாம்’ என போகிற போக்கில் உடைத்து கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால், அது, கமல் தயாரிக்கும் படமா? அனுதிப் இயக்குக்கும் சிவகார்த்திகேயன் படமா என தெரியவில்லை. இருந்தாலும், சர்ப்ரைஸ்-ஆக வைத்திருந்த விஷயத்தை இப்படி உளறிவிட்டாரே என கோபப்படவும் முடியாமல், எதுவும் சொல்ல முடியாமல் சிவகார்த்திகேயன் திணறி வருகிறார் என்கிறது சினிமா வட்டாரம்.

Manikandan
Published by
Manikandan