இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளிவரும் படங்கள்... எல்லாமே மாஸ்தான்!
வாரந்தோறும் பல படங்கள் வெள்ளிக்கிழமைகளில் போட்டிப் போட்டுக்கொண்டு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் பல மாஸான படங்கள் வர உள்ளன. அந்தப் படங்களில் தேவரா மட்டும் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு வருகிறது.
இது சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் பேச்சால் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது பிரம்மாண்டமாக உள்ளது. நிச்சயம் வசூலை அள்ளும் என்றே தெரிகிறது. வேறு என்னென்ன படங்கள் வருகிறது? ஓடிடியில் வரும் படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
தேவரா 2 பாகமாக ரிலீஸ் ஆகுது. இதுல முதல் பாகம் வரும் செப்டம்பர் 27ல் கொரட்டாலா சிவா இயக்கத்தில் வருகிறது. அனிருத் இசை அமைத்துள்ளார். பான் இண்டியா மூவி. நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார்.
மெய்யழகன் படம் வரும் 27ல் ரிலீஸ் ஆகுது. கார்த்தி, அரவிந்தசாமி, ஸ்ரீதிவ்யா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரேம்குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இது தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர் படம் செப்டம்பர் 27ல் வெளியாகிறது. நடிகர் கௌதம் வாசுதேவ் மேனனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். காமெடி நடிகர் சதிஷ் நடிப்பில் இந்த வாரம் செப்டம்பர் 27ல் வெளியாக உள்ள படம் சட்டம் என் கையில்.
இந்தப் படம் முதலில் செப்டம்பர் 20ல் தான் ரிலீஸ் ஆவதாக இருந்தது. அப்புறம் தள்ளி வைத்துள்ளனர். இந்தப் படத்தில் சதீஷ் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் பிரபுதேவா, வேதிகா நடிப்பில் உருவாகும் படம் பேட்ட ராப். இதுவும் வரும் செப்டம்பர் 27ல் தான் ரிலீஸ் ஆகிறது. எஸ்.ஜே.சினு இயக்கியுள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார்.
அதே போல ஓடிடியில் டிமான்டி காலனி 2, சூர்யாஸ் சாட்டர்டே, கொட்டுக்காளி, பிளிங்க் ஆகிய படங்கள் இந்த வாரம் வருகின்றன. அதே போல வாழை, தங்கலான் படங்களும் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளது.