இந்த வயசுலயும் தலைவர் எனர்ஜியை பாருங்க!.. பேக் டு பேக்.. நிற்க கூட நேரமில்ல போலயே!..

by Murugan |   ( Updated:2025-01-01 12:31:06  )
இந்த வயசுலயும் தலைவர் எனர்ஜியை பாருங்க!.. பேக் டு பேக்.. நிற்க கூட நேரமில்ல போலயே!..
X

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். இவருடன் நடித்த பல நடிகர்கள் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் அப்பா மற்றும் தாத்தா வேடங்களில் நடித்து வரும் நிலையில் ரஜினிகாந்த் மட்டும் ஹீரோவாக நடித்து அசதி வருகின்றார்.

வேட்டையன் திரைப்படம்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன். ஏ எல் ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. படம் வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவியது. இதனால் அடுத்த திரைப்படம் ஹிட் படமாக அமைய வேண்டும் என்பதற்காக முழு முயற்சியுடன் நடித்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த்.


லோகேஷுடன் கூலி: நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வரும் நிலையில், இந்த திரைப்படமும் நிச்சயம் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட வருகின்றது. இந்த வருடம் மே மாதம் கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது கூலி திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை பாங்காங்கில் இந்த மாதம் நடத்துவதற்கு படக்குழுவினருடன் முடிவு செய்து இருக்கிறார்கள்.

அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் சென்னை அல்லது விசாகப்பட்டினத்தில் படத்தின் கடைசி போர்ஷன்கள் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையும் என்று கூறப்படுகின்றது. அடுத்த மூன்று மாதங்கள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஜெயிலர் 2 திரைப்படம்: நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் முடித்த கையுடன் மார்ச் மாதத்தில் இருந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறாராம். நெல்சன் ஸ்டைலில் வீடியோ வெகுவிரைவில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.


ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டு கொடுத்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படமும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் நடிகர்கள் கூட அடுத்தடுத்து இவ்வளவு வேகமாக படங்களில் கமிட்டாகி நடிப்பது கிடையாது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கெல்லாம் டப் கொடுத்து கலக்கி வருகின்றார்.

Next Story