துணை முதல்வர் அஜீத்துக்கு வாழ்த்து... பின்னாடி ஏதும் விஷயம் இருக்கா?

by sankaran |
ajith uthaya stalin
X

விஜய் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பேசிய பேச்சு பல அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக எதிரி யார் என்பதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜயின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்.

மாநாடு முடிந்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. சீமான் எங்கள் கொள்கையுடன் விஜயின் கட்சி கொள்கை எடுபடவில்லை. அது கருவாட்டு சாம்பார் என்று சொல்லி விட்டார். அதே போல பாசிசம்னா பாயாசமா என்பது பாசிஸ்டுகளைக் கிண்டலடிப்பதாக உள்ளது என்றும் விஜய் பாசிசத்தைப் பற்றித் தெரியாமலேயே பேசியுள்ளார் என்றும் பல்வேறு சர்ச்கைகளைக் கிளப்பி வருகிறது.

இந்நிலையில் தற்போது அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது எதற்காக என்றால் அல்டிமேட் ஸ்டார் அஜீத் ஒரு பைக் ரேஸர். கார் ரேஸிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது இதற்கான போட்டிகளிலும் கலந்து கொள்கிறார்.

தற்போது துபாய் மற்றும் ஐரோப்பியாவில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்து கொள்கிறார். இதற்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவைப் பயன்படுத்தி உள்ளார். பிரபலமான துபாய் சாம்பியன்ஷிப் மற்றும் ஐரோப்பிய கார் பந்தயங்களில் போர்ஷே காரில் பங்கேற்கும் அஜீத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய லோகோவை காரிலும், உபகரணங்களிலும் பதிவிட்டு தமிழ்நாட்டை உலக அரங்கில் கொண்டு சென்றதற்காக அஜீத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த உற்சாகம் ஊட்டும் செயலால் எங்களுக்கு பெருமை சேர்த்ததற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையில் தமிழகத்தை உலக அரங்கில் உயர்த்த ஒன்றிணைந்து செயல்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


முன்னதாக மாநாட்டுக்கு முன்னர் விஜய் எனது நீண்ட கால நண்பர். சிறுவயது முதலே தெரியும். மக்கள் பணி தான் முக்கியம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். விஜயின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று அப்போது தெரிவித்து இருந்தார்.

மாநாட்டில் ஆளும் அரசை அப்பட்டமாகத் தாக்கி இருந்தார். இந்நிலையில் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது விஜய்க்கு எதிரானதா என்றும் பேசப்படுகிறது. அதே வேளையில் அஜீத் வாழ்த்துக் கடிதம் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் மாநாட்டில் அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story