லெப்ட் ரைட் வாங்கிய வைகைப்புயலுக்கு தடாலடி பதில் கொடுத்த காமெடி நடிகர்

by sankaran |   ( Updated:2024-10-03 09:55:35  )
singamuthu, vadivelu
X

தமிழ்த்திரை உலகில் வைகைப்புயல் என்றாலே அனைவருக்கும் தெரியும் அது வடிவேலு தான் என்று. அவர் மீம்ஸ் கிரியேட்டராகவும் உள்ளார். ஏனென்றால் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அங்கு வடிவேலுவின் காமெடி டயலாக்கை வைத்தால் கனகச்சிதமாகப் பொருந்தி விடுகிறது. அந்த அளவு இமாலய வளர்ச்சி கண்ட வடிவேலுவுக்கு கேப்டன் விஜயகாந்தை எதிர்த்து பேசிய போது தடாலடியாய் சினிமா வளர்ச்சியில் இறங்குமுகம் ஆரம்பித்தது.

தொடர்ந்து பட வாய்ப்புகளும் குறைந்தன. மீண்டு வரலாம் என இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அது பெரிய அளவில் கம்பேக் கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்;போது அவருடன் இணைந்து நடித்த சிங்கமுத்துவுடன் ஒரு வழக்கு போய்க்கொண்டுள்ளது. அதுபற்றிய விவரம் தான் இது.

நடிகர் வடிவேலுவைப் பற்றி யூடியூப்பில் அவதூறாகப் பேசியதாக வைகைப்புயல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் 5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு இருந்தாராம். அந்த வழக்கிற்கு நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் இதுதான்.

நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன். மன உளைச்சல் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. தன்னை துன்புறுத்தும் நோக்கில் வழக்கை வடிவேலு தான் தாக்கல் செய்துள்ளார்.


நான் நடிப்பதைத் தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்து இருந்தார். வடிவேலு பற்றி பேட்டி அளிக்க தடை கோர எந்த உரிமையும் அவருக்கு இல்லை. அதனால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்க்கும்போது 'எங்ககிட்டேவா...' என்று சவால் விடுவது போன்று உள்ளது.

வடிவேலுவும், சிங்கமுத்துவும் இணைந்து வேல், கோவில், தலைநகரம், மருத, திமிரு, இம்சை அரசன் 23ம் புலிகேசி, குசேலன், ஆறு, பகவதி ஆகிய படங்களில் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story