ரஜினியை மறைமுகமாக சீண்டுகிறாரா வைரமுத்து? சூரியை இப்படி புகழ்கிறாரே?!

பொதுவாக தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் படங்கள் வந்து விட்டால் ரசிகர்களைக் கையில் பிடிக்கவே முடியாது. கட்அவுட்டுக்குப் பாலாபிஷேகம், செண்டை மேளம், ஆட்டம் பாட்டம், கையில் சூடம் என திரையரங்கையே திருவிழாக் கோலமாக்கி விடுவர். சில ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேல் போய் படம் ஓடவும், தங்களது ஹீரோக்கள் நோய் நொடியில்லாமல் நீடூழி வாழவும் அலகு குத்தி, காவடி எடுத்து, அங்கப்பிரதட்சணம் எல்லாம் செய்வார்கள்.
கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கூத்தெல்லாம் கூட நடந்துள்ளது. அந்த வகையில் மண்சோறு சாப்பிடும் சம்பவமும் நடந்துள்ளது. அது இருக்கட்டும். இப்போது சூரியைப் புகழ்ந்து வைரமுத்து என்ன சொல்றாருன்னு பாருங்க.
மண்ணில் இருந்து தானியம் வரும். தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்.
மண்சோறு தின்றால் ஓடாது. மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை பலே பாண்டியா என்று பாராட்டுகிறேன் என்று பாராட்டியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டார்களா? என்ற கேள்வி எழலாம். அது உண்மைதான். 2.0 படம் வெளியாகும்போது அந்தப் படம் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு அங்கப்பிரதட்சணம் எல்லாம் செய்துள்ளார்களாம்.
அதே போல ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அப்போதும் அதற்கு நன்றிக்கடனாக தெரிவிக்கிறோம் என மண்சோறு சாப்பிட்டார்களாம். புளூசட்டை மாறன்கூட நேத்து ஹீரோவான சூரி கூட தன் ரசிகர்கள் மண்சோறு சாப்புடறது முட்டாள்தனம்னு சொல்லிருக்காரு. 50 வருஷமா உங்க படம் வரும்போதெல்லாம் ரசிகர்கள் மண்சோறு திங்கறாங்க.
அதைக் கண்டிக்க வாய் வரல. நீங்கெல்லாம் ஒரு பெரிய மனுஷனா என்று பதிவு போட்டு இருந்தார். அது ரஜினிதான்னு பலரும் சொன்னாங்க. ஏன்னா அவரு ரசிகர்கள்தான் இதுக்கு முன்னாடி அப்படி மண் சோறு சாப்பிட்டுருக்காங்க. அந்த வகையில் இப்போது வைரமுத்து சூரியைப் புகழ்வதைப் பார்த்தால் ரசிகர்களை நெறிப்படுத்தியது சூரி தான் என்றும் ரஜினி அதைச் செய்யவில்லை என்றும் தான் சொல்லாமல் சொல்லி இருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.