ரெட்ரோ ஒரு தோல்விப் படம்!.. சக்சஸ் மீட் எல்லாம் பொய்!. பொளக்கும் பிரபலம்!..

சூர்யாவுக்கு நேரமே சரியில்லை போல. சமீபகாலமாகவே பல பலமுனை தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறார். சிங்கம் 2 படத்திற்கு பின் அவருக்கு ஒரு மெகா ஹிட் படம் அமையவில்லை. ஒடிடியில் வெளியான ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் மட்டுமே வரவேற்பை பெற்றது. ஆனால், அந்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை என்பதால் அப்படத்தின் வசூல் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.
பண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் ஹிட் அடிக்கவில்லை. அதன்பின் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்க துவங்கினார். ஆனால், ஏதோ பிடிக்காமல் அந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அதன்பின் அந்த படத்தில் அருண் விஜய் நடித்தார்.
அதேபோல், ஹரி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் சொன்ன கதைகள் பிடிக்காமல் அதில் நடிக்காமல் தவிர்த்தார். ஆனால், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். ஹாலிவுட் பாணியில் இப்படம் உருவாகியிருக்கிறது. உண்மையிலேயே தமிழில் ஒரு புதிய முயற்சி என கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய திரைப்படம் இது.
ஆனால், இப்படத்தின் திரைக்கதை ஏனோ ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதோடு, சூர்யாவை பிடிக்காத பலரும் இப்படத்திற்கு எதிராக ஒட்டுமொத்தமாக வன்மத்தை கக்க இப்படம் தோல்வி அடைந்தது. அடுத்து கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரொ படம் மே 1ம் தேதி வெளியானது. கங்குவாவை ஒப்பிடும்போது இப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.
இப்படம் 100 கோடி வசூலை தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஒருபக்கம், சசிக்குமரின் டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது. ரெட்ரோ ஓடிய பல தியேட்டர்களில் அப்படத்தை தூக்கிவிட்டு டூரிஸ்ட் பேமிலி படம் திரையிடப்படதாக செய்திகள் வெளியானது. முதல் ஒரு வாரம் இருந்த வசூல் இப்போது இல்லை என்றே பலரும் சொல்கிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவையும் படக்குழு கொண்டாடியது. ஆனால், ரெட்ரோ ஒரு தோல்விப்படம் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். இந்த படம் பெரிய லாபமெல்லாம் இல்லை. ஆனால், சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள்’ எனவும் அவர் பேசியிருக்கிறார். மேலும், கதை நல்ல கதைதான். ஆனால், அழகாக சொல்ல வேண்டிய கதையை எங்கெங்கோ சுற்றி சொல்லியிருக்கிறார்கள்’ என அவர் பேசியிருகிறார்