அந்தரத்தில் நிற்கும் ரஜினி-கமல் காம்போ.. கூலியில் காலியான லோகேஷ்.. படம் கைவிடப்படுகிறதா?
46 வருடங்களுக்கு பிறகு ரஜினி, கமல் இணைந்து நடிப்பது தமிழ் சினிமா ரசிகர்களுடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதில் பல சிக்கல்கள் இருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார் மேலும் அதில்,” சுமார் எட்டு மாதங்களுக்கு முன் இந்த படத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். விக்ரம் படம் ரஜினி பண்ண வேண்டியது. அந்த நேரத்தில் கமலுக்கு பெரிதளவில் மார்க்கெட் இல்லை. அதனால் கமல், ரஜினியிடம் ராஜ்கமல் நிறுவனத்திற்காக ஒரு படத்தை செய்து தாருங்கள் என்று கேட்டுள்ளார்”.
”ரஜினியும் மறக்காமல் ஓகே சொல்லிவிடுகிறார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் கதை சொல்லி எல்லாம் ஓகே ஆன பிறகு சம்பளத்தைப் பற்றி பேசும் பொழுது தான் விஷயமே புரிகிறது. இந்த படத்தை கமல் மட்டும் தயாரிக்கவில்லை அவருடன் சேர்ந்து வேறு ஒருவரும் தயாரிக்கிறார் என்று. அது விஜய் டிவி மகேந்திரன் தான். அவர் கமலுடன் நிழலாய் பயணித்து வருகிறார். இதில் ரஜினிக்கு சின்ன வருத்தம். அதன் பிறகு ரஜினி விலகிக்கொண்டார்”.
”அந்த கதாபாத்திரத்தில் கமல் நடித்தார். அந்தப் படம் எதிர்பாராத வெற்றியை பெற்றது. கமலே புத்துணர்ச்சி அடைந்து விட்டார். அதன் பிறகு தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்தார் கமல். ரஜினிக்கு இது ஆச்சரியமாக இருந்தது நாம் வேண்டாம் என்று சொன்ன ஸ்கிரிப்ட்டை இவர்கள் சக்சஸ் ஆகிவிட்டார்களே என்று மகேந்திரனை புரிந்து கொண்டார் ரஜினி. அதனால மறுபடியும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். அந்த படம் தான் ரஜினி-கமல் காம்போவாக உருவாக இருக்கிறது”.
’இதற்கிடையில் ரஜினியுடன் லோகேஷ் கூலி படம் பண்ணுகிறார் இதில் நிறைய விமர்சனங்கள். ரஜினி விமர்சனங்களை கேட்டுக்கொள்வார். அதில் எது சரியோ அதை எடுத்துக் கொள்வார். இப்படி கூலி படத்திற்கு விமர்சனங்கள் வேறு மாதிரியாக இருக்கு மக்களின் பார்வை வேறு மாதிரியாக இருக்கு. இதனால் ரஜினி கமல் படம் 8 மாதத்திற்கு முன்பு முடிவு செய்யப்பட்டதால் இயக்குனர் மாற்றம் செய்வார்களா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்”.
”படம் செய்யும் எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம் ஏனென்றால் சூழ்நிலை மொத்தமாக தற்போது மாறிவிட்டது. இந்த படம் தயாராகுவதற்கு இன்னும் குறைந்தது ஒன்றை வருடங்கள் கூட ஆகலாம். ஏனென்றால் எல்லோருக்கும் தனித்தனி கமிட்மென்ட் இருக்கிறது. ரஜினி,கமல் ஏற்கனவே எடுத்த முடிவில் இனிமேல் உறுதியாக இருப்பார்களா? என்பது எனக்கு தெரியவில்லை”. என்று கூறியுள்ளார்
