Categories: Cinema News latest news

ஜனநாயகனில் டன் கணக்கில் கேமியோ.. விஜய்க்கு சரியான farewell ட்ரீட் கொடுத்த எச்.வினோத்..

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இன்று சினிமாவில் உச்சத்தில் உச்சத்தில் இருப்பதால் தொடர்ந்து படங்களில் நடித்து அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று தனது பாதையை அரசியல் பக்கம் திருப்பினார்.

இது விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தை கொடுத்தது. விஜய் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகியுள்ளது. இது விஜய்க்கு கடைசி படம் என்பதால் இயக்குனர் இதில் பல சுவாரஸ்யங்களை பதுங்கி வைத்துள்ளார்.

சினிமா விமர்சகர் மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் இதைப் பற்றி கூறுகையில்,” தெலுங்கு பாலகிருஷ்ணா படத்தின் ரீமேக்கில் தான் விஜய் தற்போது நடித்த முடித்துள்ளார். 70% அந்த படத்தின் கதைதான். அந்த படத்தில் விஜய் அரசியலுக்கு வருகிற மாதிரி எல்லாம் காட்சிகள் இருக்கிறது. பல ஊர்களில் மக்கள் வாக்கு செலுத்துவது போல் காட்சி அமைப்பு இருக்கிறது”.

anthanan vijay

suspense கேமியோ :

  • ”அது மட்டும் இல்லாமல் ஊழல் செய்த அமைச்சரை கைது செய்து விஜய் இழுத்துச் செல்வது போல் காட்சி அமைப்பும் இருக்கிறது. இந்த படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. மேலும் இந்த படத்தில் லோகேஷ், அனிருத், நெல்சன், அட்லீ போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்”.
  • ”இது விஜய்க்கு கடைசி படம் என்பதால் அவருக்கு tribute கொடுக்கும் விதமாக இதில் என்னெல்லாம் சேர்க்கலாமோ எல்லாத்தையும் சேர்த்து இருக்கிறார்கள். அனிருத் தனியாக ஒரு பாட்டுக்கு வந்து டான்ஸ் ஆடுகிறார். இது மட்டுமில்லாமல் இன்னும் நிறைய suspense இயக்குனர் வைத்திருக்கிறார்”.

படம் ஓடலன்னா விஜய் காலி :

“திரையுலகத்தை விட்டு விஜய் அரசியலுக்கு போகும் பொழுது வசூல் சக்கரவர்த்தியாக தான் போக வேண்டும் என்று நினைக்கிறார். இல்லையென்றால் அவருக்கு படம் ஓடவில்லை அதனால்தான் அரசியல் பக்கம் வந்து விட்டார் என்று விமர்சனங்கள் வரும். சாதாரணமாகவே விஜயை லெப்ட் ரைட் புரட்டி எடுக்கிறார்கள். நிஜமாகவே படம் ஓடவில்லை என்றால் விஜய் காலிதான்”. என்று கூறியுள்ளார்.

SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
SATHISH G