1. Home
  2. Cinema News

வடசென்னை படத்துக்கும் STR 49-க்கும் என்ன சம்பந்தம் இருக்கு?.. ரவுடியாக மிரட்டவரும் சிம்பு..

வடசென்னை படத்துக்கும் STR 49-க்கும் என்ன சம்பந்தம் இருக்கு?.. ரவுடியாக மிரட்டவரும் சிம்பு..

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் விருப்பத்தக்க இயக்குனராக இருந்து வருகிறார். விடுதலை-2 படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்களின் ஆசை என்னவோ வடசென்னை-2 படத்தை எடுக்க வேண்டும் என்றுதான்.

ஆனால் தற்போது வெற்றிமாறன் சிம்புவுடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு தற்போது str-49 என டம்மி டைட்டில் வைத்து இதற்கான ப்ரொமோ வெளியாகி இருந்தது. சிம்பு தக் லைஃப் படத்திற்குப் பிறகு வெற்றிமாறனுடன் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் முதல்முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் எந்த மாதிரியான கதை பின்னணியில் இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். அதில், "படத்தின் ப்ரோமோ வீடியோ பார்க்கும் பொழுது இது வடசென்னை பேக் ட்டிராப்பில் உருவாக்க படுமோ என்று சிலருக்கு சந்தேகம் வரும். அது உண்மைதான் வடசென்னை படத்தில் இருந்து ஒரு கிளை கதையை கொண்டுதான் வருகிறது. கண்டிப்பாக அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒரு சம்பந்தம் இருக்கு".

"வடசென்னை படத்தில் கிஷோர் கேரக்டரில் இருந்து ஒரு கதை ஆரம்பிக்கிறது. அதுதான் எஸ் டி ஆர் 49 படத்தின் கதை. அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்காக செட் அமைக்கப்பட்டுள்ளது அதன் பட்ஜெட் சுமார் 20 கோடிக்கு மேல் சென்றுள்ளது. படத்துக்கு பட்ஜெட் சொன்னதை விட இவர்கள் செலவழிக்கும் பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்பு நிறுவனம் அரண்டு போய் உள்ளது. அதன் பின்னர் நிலைமையை வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்திற்கு எடுத்துக் கூறி பேச்சில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. என்று கூறியுள்ளார்

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.