தமிழ்நாட்டுல மைக் நீட்டுனா பேசாத நீங்க வெளிநாட்டுல மட்டும் ஏன் பேசறீங்க? விளாசிய பிரபலம்

by Sankaran |   ( Updated:2025-01-16 08:52:43  )
Ajith
X

பட புரொமோஷன்களில் கலந்து கொள்ளாததைத் தனது பாலிசியாக வைத்திருக்கும் அஜீத்தை வலைப்பேச்சாளர் அந்தனன் கடுமையாக விமர்சித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

தயாரிப்பாளருக்கும் அதே எண்ணம்: ஒருவர் தனது லட்சியத்தை அடையும்போது அது ஆரவாரமாகும். அதைத்தான் கார் ரேஸ்ல ஜெயித்த அஜீத் கொண்டாடிருக்காரு. நமக்கு என்னன்னா இதே எண்ணம்தான ஒரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். ஒரு படத்தை எடுக்குற தயாரிப்பாளர் என்னென்ன கனவு கண்டுருப்பாரு.

ஒரு டைரக்டர் என்னென்ன கனவோட வந்துருப்பாரு. அசிஸ்டண்ட் டைரக்டரோட லைஃப்ப எடுத்தா கிட்டத்தட்ட கொத்தடிமைதான். அவன் போயி கார் கதவைத் துடைச்சி, ஷூவைத் துடைச்சி எல்லாம் நான் பார்த்துருக்கேன். இன்னைக்கு வேணா கொஞ்சம் மாறி இருக்கலாம்.


படமாவே மதிக்க மாட்டேன்: துணி துவைச்சி, அவ்வளவு அசிங்கப்பட்டு, கேவலப்பட்டு, மெல்ல மெல்ல வளர்ந்து அஜீத்தை வச்சி ஒரு படம் எடுத்து அந்தப் படம் ரிலீஸ் ஆகுது. அப்போ அந்தப் படத்துக்காக நான் எக்ஸ் தளத்துல ஒரு பதிவு போட மாட்டேன். அந்தப் படத்தோட புரொமோஷனுக்கு வர மாட்டேன். அதை ஒரு படமாவே மதிக்க மாட்டேன்னு நீங்க நினைக்கும்போது அவன் மனசு என்னவா இருக்கும்?

இன்னைக்கு உங்களுக்கு ஒரு மொமண்ட் இருக்குல்ல. கொண்டாடுறீங்கள்ல. இந்தக் கொண்டாட்டத்தை அவனும் அனுபவிக்கணும்னு நினைச்சாதானே மனுஷன். அதை நீங்க செய்யலங்கற போது எனக்கு தொடர்ந்து வருத்தம் உண்டு. அதை இந்த ஏரியாவுக்கு வந்து செய்யலங்கற வரைக்கும் தொடர்ந்து நான் சொல்லிக்கிட்டு இருப்பேன்.

புரொமோஷன்: அஜீத்தை ஒரு பக்கம் நாம கொண்டாடுறோம். பாராட்டுறோம்கறதை எல்லாம் தாண்டி இன்னொரு பக்கம் விமர்சனம் பண்ணிக்கிட்டே இருப்பேன். அவரு என்னைக்கு ஒரு படத்துக்கு புரொமோஷன்னு வந்து நிக்கிறாரோ அது வரைக்கும் சொல்லிக்கிட்டே இருப்பேன் என்கிறார் அந்தனன்.

இத்தனை நாள் கழிச்சி பேட்டி ஒண்ணு கொடுத்தாரே. அதைப் பற்றி என்ன சொல்றீங்கன்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு அந்தனன், அவருக்கு தேவைப்படும்போது மீடியாக்களை சந்திப்பது இதுதான். தமிழ்நாட்டு ஏர்போர்ட்ல மைக் நீட்டுனா பேசாத நீங்க வெளிநாட்டுல மட்டும் ஏன் பேசறீங்க?


பப்ளிசிட்டி தேவை: உங்களுக்கு ஒரு பப்ளிசிட்டி தேவைப்படுது. இதே மாதிரி வளர்ற கால கட்டத்தில் இங்கும் பேட்டி கொடுத்தீங்க. அதை வளர்ந்த பிறகு மாத்திக்கிட்டீங்க. இதே போலதான் நாளை அங்கும் ரேஸ்ல உச்சத்தைத் தொடும்போது நடக்கும்.

எனக்குத் தேவைப்படும்போது ஒருத்தன் முதுகுல ஏறிக்குவேன். தேவைப்படாத போது எட்டி உதைச்சிட்டுப் போவேன்கறதுதான இது. அதைத்தான் நாம முன்வைக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story