நயன்தாராவோட இன்னொரு முகம்... நேரடியா தொடர்பு கொள்ளத் தயங்குவது ஏன்? வெளுத்து வாங்கும் பிரபலம்
குரங்கு பிரச்சனையில் ஆரம்பித்ததும் வலைப்பேச்சாளர் பிஸ்மி நயன்தாராவைப் பொளந்து கட்டி விட்டார். தொடர்ந்து இப்போது அந்தனனும் பேசி இருக்கிறார். நயன்தாரா நீங்க ஒண்ணும் மன்னர் பரம்பரை அல்ல... எங்களுக்கும் பேசத் தெரியும் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.
ட்ரெண்ட் செட்டர்
நாம ஒரு நல்லது கெட்டதுகளை சொல்லும்போது நயன்தாரா நம்ம மீது பாயும்போது வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. இவங்களால சினிமாவுல மறுமலர்ச்சி உண்டாகி இருக்கு. சினிமாவின் போக்கையே மாத்திட்டாங்க. வழக்கமாக இருந்த சினிமாவுல ட்ரெண்ட் செட்டர் கொண்டு வந்து வேற லெவலுக்குப் போயிட்டாங்கன்னா அவங்களைப் பாராட்டிப் பேசலாம்.
ஐடியா கொடுத்துருக்காங்க
அந்தமாதிரி அவங்க மாறணும். ஆனா இதை எல்லாம் விட்டுட்டு ஏன் இப்படி பேசுறாங்கன்னு தெரியல. யூடியூபர் எல்லாரும் என்னைப் பற்றி செய்திகளைப் போடுங்க. அப்போதான் ஜம்முன்னு இருக்கலாம். வலைப்பேச்சு அப்படி தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்கன்னு உங்களுக்கு எல்லாம் ஐடியா கொடுத்துருக்காங்க.
ஜிபி முத்து
நயன்தாராவோட வீடியோ ஜிபி முத்துவோட வீடியோவை விட குறைவா தான் வியூவ்ஸ் போகுது. அந்தளவு பிளாப் ஆன நடிகை. ஆனா இவங்க வேற மாதிரி நினைக்கிறாங்க. அதுதான் யதார்த்தம். அப்படி இருக்கும்போது அவங்களைப் பத்திப் பேசுனா பெரிய ஆளா வாழ்ந்துடுவாங்களா என்ன? என்று கேட்கிறார் அந்தனன்.
10 மடங்கு ரிபீட்
நயன்தாரா குரங்குன்னு பேசுனதை எல்லாம் அவங்கதான் உணரணும். நமக்கு இப்படி என்னைப் பேசக்கூடாதுன்னு சொல்ல முடியாது. நமக்குன்னு ஒரு தரம் இருக்கு. இன்டஸ்ட்ரில இத்தனை வருஷமா இருக்கோம். நமக்குன்னு ஆடியன்ஸ் இருக்காங்க. நாம வந்து தவறான வார்த்தையை உபயோகிச்சா அது 10 மடங்கு திருப்பி வந்து தாக்கும்னு உணரணும்.
சொல்லத் தயங்குவாங்க
இப்போ குரங்குன்னு எங்களைத் திட்டுறாங்கன்னா பிஸ்மி என்ன சொல்றாரு. உங்க குடும்ப போட்டோவைப் பார்த்துட்டு வந்து எங்களை அப்படி திட்டுங்கன்னு சொல்றாரு. இது தேவையா? அப்புறம் ஏன் இப்படி ஒரு வார்த்தையைப் பேசுறீங்க? படப்பிடிப்புக்கு வர்றாங்க. அங்க என்னென்ன அசவுகரியங்கள் வருதுன்னு சொல்றோம்.
அவங்களை வச்சிப் படம் எடுத்த பல பேரு அவங்களை நேரடியா அதை சொல்லத் தயங்குவாங்க. இன்டஸ்ட்ரியில இருக்குறவங்க அதை சொல்லத் தயங்குவாங்க. ஏன்னா அவங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அப்படின்னா தன்னோட மனக்குமுறலை எப்படியாவது வெளிப்படுத்தணும்னு நினைப்பாங்க.
5ஸ்டார் ஓட்டல்
வலைப்பேச்சுல இதைப் பத்தி சொல்ல சொல்லுங்க. இப்படி நடந்துச்சும்பாங்க. அப்போ நம்ம சொல்றோம். அப்ப நடக்குற விஷயத்தை நாம சொல்றது என்னன்னா இன்னொரு இடத்துல அப்படி நடக்காதீங்கன்னு தான் சொல்றோம். நயன்தாரா பீக்ல இருந்த காலகட்டத்துல அவங்க 5ஸ்டார் ஓட்டல்ல தங்குனா அவங்களோட உதவியாளர்களுக்கும் பக்கத்துலயே ரூம் போட்டுக் கொடுக்கணும்னு கேட்பாங்களாம்.
வேறொரு முகம்
அப்போ செலவு எங்கே போகுது? இதெல்லாம்தான் நாம சுட்டிக் காட்டுறோம். ஆடியன்ஸ் எல்லாம் அவங்களை உன்னதமான இடத்துல வச்சிப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. நம்ம பிரச்சனை பொதுவெளிக்கு வரும்போது அவங்களுக்கே ஒரு பயம் வரும். இவ்வளவு சீப்பான ஆளான்னு அவங்க நினைச்சிட்டாங்கன்னா உங்களுக்கே அது டவுன் ஆகிடும். அதனால பொதுமக்கள் மத்தியில தன்னோட இமேஜைத் தக்க வைக்கணும்னு நயன்தாரா வேறொரு முகத்தைக் காமிச்சி வாழ்ந்துகிட்டு இருப்பாங்க.
கள்ளக்கடத்தல் வியாபாரம்
நாம சொன்னதுல பிரச்சனைன்னா நம்ம கிட்ட நேரடியா சொல்லணும். வேறொரு ஆள் மூலமா சொல்லி விடுறது எல்லாம் கள்ளக்கடத்தல் வியாபாரம் மாதிரி இருக்கு. அவங்க பாஸ் பண்ற தகவலை மட்டும் நாம துப்பணும். அதுக்காக நம்மைப் பயன்படுத்த நினைக்கிறாங்க. எல்லாருமே ஒரு கருத்தை சொல்லணும்னா அவங்க தான் காண்டக்ட் பண்ணுவாங்க. ஆனா இவங்க அப்படி இல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.