சிவகார்த்திகேயன் பொத்தாம்பொதுவா பேச என்ன காரணம்? அந்தனன் சொல்றதைக் கேளுங்க!

by Sankaran |
sk, anthanan
X

சிவகார்த்திகேயன் அமரன் விழா மேடையில் சம்பளம் குறித்து பேசிய பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் பலரும் அவரைப்பற்றிய பலவிதமாக பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

கமல் ஏற்பாடு: சிவகார்த்திகேயனின் திரை உலக வாழ்க்கையில் அமரன் படம் முக்கியமானதாக அமைந்துள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை கமல் செய்து கொடுத்துள்ளார். வெறும் பணத்தை மட்டும் அவர் போடவில்லை. ராணுவ அதிகாரிகளிடம் பேசி பல இடங்களில் படம்பிடிக்க அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது: சிவகார்த்திகேயனின் உழைப்பும் சேர்ந்து தான் படம் வெற்றி அடைந்துள்ளது. அவ்வளவு முக்கியமான படத்தைக் கொடுத்த கமலையே நாளை சிவகார்த்திகேயன் கண்டுக்க மாட்டாருன்னும் சொல்றாங்க. இந்தப் படத்துலதான் நான் முழுசா சம்பளம் வாங்கிருக்கேன்னும் சிவகார்த்திகேயன் சொன்னது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதற்கு முன் அவர் நடித்த படங்களில் ஏதாவது சில கடன்பிரச்சனைகள் படத்திற்கு வரும். வேறு வழியில்லாமல் சம்பளத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இருப்பார். ஆனால் அமரன் படத்தின் ரிலீஸ்சின் போது சிவகார்;த்திகேயனுக்கு எந்த நெருக்கடியும் கமல் கொடுக்கவில்லை.

பாராட்ட வேண்டிய விஷயம்: பல நடிகர்களுக்கும் இதுபோன்ற சங்கடங்கள் வந்தாலும் அவர்கள் சம்பளத்தில் கெடுபிடியாகத்தான் இருப்பார்கள். ஆனால் சிவகார்த்தியேன் விட்டுக் கொடுத்து இருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

சிவகார்த்திகேயனை வைத்துப் படம் எடுத்தவர் தனுஷூம் கூட. அவர் பாக்கி வைத்தாரான்னும் தெரியவில்லை. எஸ்.கே. வெளிப்படையாகச் சொல்லவில்லை. மாதவனுக்கும் இதுபோன்ற நெருக்கடி வந்தது. அப்போது தயாரிப்பாளர்கள் சேர்ந்து அவரை மன்னிப்பு கேட்க வைத்தார்.

பெரிய பேக்ரவுண்டு: அதே போல ஜெய்யும் சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்டார். அப்போது தயாரிப்பாளர் சங்கம் கட்டுக்கோப்பாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. சிவகார்த்திகேயனுக்கு பெரிய பேக்ரவுண்டு இருக்கு. அதனால என்னை என்ன செய்துவிட முடியும்னு கூட பேசி இருக்கலாம். சிவகார்த்திகேயன் பேசியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் பதறியபடி பேசவில்லை.

சந்தர்ப்ப சூழல்: திட்டம்போட்டுத்தான் பேசி இருக்கிறார். கடந்து வந்த படியை நினைத்துப் பார்க்க வேண்டும். பிரச்சனைகள் இருக்கும். ஆனா வேணும்னே யாரும் செய்து இருக்க மாட்டார்கள். சந்தர்ப்ப சூழலில்தான் நடந்திருக்கும். அதனால் எஸ்கே. இனிவரும் மேடைகளிலாவது இப்படி பொத்தாம்பொதுவாக பேசுவதை நிறுத்தினால் அவருக்கு நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story