1. Home
  2. Cinema News

நடிகனுக்கு அப்படி தான் புத்தி போகும்.. சிவகார்த்திகேயனின் போலி முகத்தை அம்பலப்படுத்திய பிரபலம்..

நடிகனுக்கு அப்படி தான் புத்தி போகும்.. சிவகார்த்திகேயனின் போலி முகத்தை அம்பலப்படுத்திய பிரபலம்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் எந்த ஒரு பின்புறமும் இன்றி தன் திறமையால் இன்று முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார். அமரன் என்ற பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு செப்டம்பர் 5 அன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

கோட் படத்தில் விஜையிடம் துப்பாக்கியை வாங்கியதில் இருந்து அடுத்த தளபதி இவர்தான் என்று கூவ தொடங்கிவிட்டனர். இதற்கெல்லாம் திட்டம் போட்டு தான் அவர் சினிமாவில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்று பகிரங்கமாக சொல்லி இருக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி அதில் ”சினிமா விழாக்களில் தொகுப்பாளராக இருந்து விஜய் டிவியில் கலக்கி, மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்று இவ்வளவு தூரம் சிவகார்த்திகேயன் வளர்ந்ததற்கு அவருடைய கடின உழைப்புதான் காரணம்”.

”அதேபோல சினிமாவில் இவரை விட திறமையானவர்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால் அவருக்கெல்லாம் கிடைக்காத இந்த உச்சம் இவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு சில விஷயங்கள் இருக்கிறது. தன்னை மார்க்கெட்டிங் எப்படி செய்து கொள்ள வேண்டும் என்று பக்கா பிளான் சிவகார்த்திகேயனிடம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவருடன் இருந்த ஆர்.டி ராஜா என்பவர்தான். சிவகார்த்திகேயன் பற்றி எந்த ஒரு நெகட்டிவிட்டியும் பரவாமல் பார்த்துக் கொள்வார்”.

”அதை மீறி ஏதாவது பத்திரிகையாளர் இவரை பற்றி எழுதினால் இவர் எம்ஜிஆர் மாதிரி இவர் கடவுளின் குழந்தை என்று அவர்களின் மனதை மாற்றி விடுவார். இன்று தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, விக்ரம், சூர்யா, கார்த்தி என்ற பெரும் கூட்டம் இருந்தாலும் இவர்கள் எல்லாரையும் மிஞ்சிய நடிகராக வர வேண்டும் என்பதுதான் சிவகார்த்திகேயனின் எண்ணமாக இருந்தது. ஒவ்வொரு படம் முடிந்த பிறகு சிவகார்த்திகேயனின் சம்பளம் பெரிய அளவில் உயர்த்துவார்”.

’ஏனெனில் இப்பொழுது நாம் சம்பளத்தை உயர்த்தினோம் என்றால் நாம் இரண்டு நடிகர்களை கீழே இறக்கி நாம் மேலே சென்று விடலாம் என்ற எண்ணம் தான். அப்படி அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை உயர்த்தி பக்காவாக பிளான் பண்ணி இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்துள்ளார். அப்படி திட்டம் போட்டு வரும் பொழுது அந்த இடத்திற்கு என்று ஒரு அழுத்தம் இருக்கும்”.

”அதையும் அவர்தான் ஹேண்டில் பண்ணி ஆக வேண்டும். அதனால் மதராஸி படமும் 300 கோடி வசூல் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் அவரிடம் இருக்கிறது. அமரன் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டெடுக்கப்பட்ட படம் அந்த படத்தில் எந்த ஹீரோ நடித்து இருந்தாலும் நன்றாக ஓடி இருக்கும். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு மதராஸி படம் தான் அவர் யார் என்பதை தீர்மானிக்கும்”. என்று சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து கூறியுள்ளார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.