தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட அஜித்.. இனி தல தரிசனத்திற்கு வாய்ப்பே இல்லை ?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். என்னதான் உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் நாளுக்கு நாள் இவரை பின்தொடரும் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது.
சினிமா நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகள் என்று எதிலுமே தன்னை ஈடுபடுத்தி கொள்ளாத நபராக அஜித் இருந்து வருகிறார். அப்படி அவர் செய்கின்ற நல்ல விஷயங்கள் எதுவும் வெளியில் தெரிவதில்லை. தான் செய்த உதவிகளை என்றுமே வெளியில் சொன்னதும் கிடையாது அதை அறிக்கையிடும் பழக்கமும் கிடையாது. மனது கேட்காமல் யாராவது அஜித்தின் பெருந்தன்மையை வெளிய சொல்லிவிடுவார்கள் அப்பொழுதுதான் அவர் இவ்வளவு உதவி செய்திருக்கிறாரா என்று வெளியில் தெரிய வரும்.
படங்களை தாண்டி அஜித் தற்போது கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை நடந்த கார் ரேஸ் அனைத்திலும் பங்கேற்றது மட்டும் இல்லாமல் அதில் வெற்றியும் அடைந்துள்ளார். தன் பேஷனுக்காக தான் அஜித் ரேசிங்கள் ஈடுபட்டு வருகிறார் என்று அஜித்தின் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அஜித் தற்போது படங்கள் இல்லாமல் இருக்கிறார். அதை மறைப்பதற்காகவே அஜித் ரேசிங்கில் ஈடுபட்டு வருவதாக இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
அஜித்திடம் படம் பண்ணுவதற்கு சென்றாலே அவர் கேட்கும் சம்பளத்தை கேட்ட தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்டுகிட்டு ஓடுகிறார்களாம். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ’குட் பேட் அக்லி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றாலும் தயாரிப்பாளருக்கு அது சிறிது நஷ்டத்தை கொடுத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில்,
” அஜித்தை வைத்து படம் பண்ணுவதற்கு ஒரு தயாரிப்பாளர் தயாராக இருந்தார். அவர் ஏற்கனவே வெங்கட் பிரபுவிற்கு அட்வான்ஸ் தொகையும் கொடுத்திருந்தார். தற்போது கோட் படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவும் படம் இல்லாமல் இருக்கிறார். அதே சமயம் அஜித்தும் அடுத்த படத்தில் கமிட்டாகவில்லை என்பதால் இவர்கள் இருவரையும் இனைத்து ”மங்காத்தா 2” படத்தை எடுக்கலாம் என்று அந்த தயாரிப்பாளர் நினைத்துக் கொண்டிருந்தார்”.
”எல்லாம் சரியாகி ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும் நேரத்தில் அஜித் ஒரு சம்பளம் கேட்டுள்ளார். அதை கேட்ட தயாரிப்பாளர் அடுத்த பிளைட் புக் பண்ணி அவர் சொந்த ஊருக்கே புறப்பட்டு விட்டார். அதனால அந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது தற்போது அஜித் படம் தொடங்குவதற்கு அவரின் சம்பளமே முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதை அஜித் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்”. என்று கூறியுள்ளார்.
