அதள பாதாளத்தில் ரஜினி.. இனி அவ்வளவுதான்.. ரிட்டையராக நேரம் வந்துருச்சா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதிலும் ஸ்லோமோஷன் வாக்கிங்கில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி இன்னும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு கடும் போட்டியாளராக விளங்குகிறார். எத்தனை புது முகங்கள் வந்தாலும் ரஜினி என்ற ஒரு முகத்தை யாராலும் மறக்கடிக்க முடியவில்லை. வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களும் ரஜினியின் தீவிர ரசிகனாகவும் அவரின் ஸ்டைல்களை பாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
என்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அடையாளத்தை உடைத்து. ரசிகர்களை கவர்ந்தார் ரஜினி. பார்ப்பதற்கு கருப்பு நிறம், நடுத்தர உயரம், வேகமான வசன உச்சரிப்பு இவை அனைத்தும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. அதனுடன் ஸ்டைல் மன்னனாகவும் வலம் வந்தார். தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படங்களில் நடித்து இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினிக்கு பெரிதாக பேர் சொல்லும் படங்கள் எதுவும் அமையவில்லை.
அதன் பிறகு வந்த லிங்கா, கோச்சடையான் போன்ற படங்களால் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு போர் அடித்து விட்டது. அதன் பிறகு வெளியான கபாலி திரைப்படம் ரஜினிக்கு கம்பேக்காக அமைந்தது. அதன் பிறகு இன்று வரை ரஜினிக்கு எந்த படமும் அவரின் முந்தைய படங்கள் போல் பெரிதாக ஓடவில்லை மக்களின் கவனத்தையும் ஈர்க்க தவறி வருகிறது.
ரஜினி கடைசியாக நடித்த கூலி படம் வரை சற்று தடுமாறி கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் இதைப் பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில், ”சமீப கால ரஜினியின் படங்கள் சற்று சறுக்கல்களை தான் சந்தித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரஜினி கதை கேட்கும் பொழுது இது நமக்கு செட் ஆகுமா? நமது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று பார்த்துதான் கதை செலக்ட் செய்வார்”.
”ஆனால் தற்போது ரஜினியின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று பான் இந்தியா என்று பெரிய பட்ஜெட்டில் எடுக்கிறார்கள். அவரும் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். தயாரிப்பாளருக்கு லாபம் வர வேண்டும் என்று ரஜினி அதற்கான கதையை தேர்வு செய்கிறார். சில நேரங்களில் அது வெற்றி பெறுகிறது பல நேரங்களில் தோற்றுவிடுகிறது”.
”முன்பு கொஞ்சம் இளமையாக இருப்பார். அதனால் பத்து பேரை அடிப்பார். ஆனால் இன்றைக்கு அவருடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கிறார். அந்த சிக்கலில் தள்ளப்பட்டுள்ளார். அதனால் தற்போது ஆடியன்சிஸ்க்கே ஜனரஞ்சக அம்சம் குறைவாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவரின் படங்களுக்கு முன்பு இருந்தது போல தற்போது மவுஸ் இருப்பதில்லை”. என்று கூறியுள்ளார்.
