தனுஷை அழிக்கத் துடிக்கும் அந்த 4 பேர்?.. வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபலம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் ஜொலித்தது மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மையுடன் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி வந்து கொண்டிருக்கிறார். என்னதான் இவரது திரைப்படம் பாசிட்டிவாக இருந்தாலும் இவரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அதுவும் தனுஷை அழிப்பதற்கு என்றே பலபேர் ரூம் போட்டு செயல்படுகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற இட்லி கடை ஆடியோ லான்ச் விழாவில் தனுஷை விட அவரது மேனேஜர் பொங்கி இருப்பார். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று மூத்த பத்திரிகைளாரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில்,” இட்லி கடை திரைப்படம் மிகவும் பிரமாதமாக வந்திருப்பதாக அதில் பணியாற்றிய கலைஞர்கள் என்னிடம் கூறினார்கள். தனுஷிற்கு திரையுலகத்தைப் பொருத்தவரை சிவகார்த்திகேயன் எதிரியாக இருக்கிறார். அவரின் கூலிப்படைகள் தனுஷை கடும் வன்மம் கொண்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்”.
”சிவகார்த்திகேயன் சம்பளம் கொடுத்து ஆட்கள் வைத்து இதை செய்கிறார். மற்றொருபுறம் சிம்பு ரசிகர்களும் தனுசுக்கு எதிராக இருக்கிறார்கள். பல வருடங்களாக சிம்புவுக்கும் தனுஷுக்கும் ஒரு பகை இருந்து கொண்டே இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது இருவரும் நாங்கள் நண்பர்கள் என்று சொன்னாலும் ரசிகர்கள் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் சிவகார்த்திகேயனின் இணைய கூலிப்படைகளுடன் சிம்பு ரசிகர்களும் இணைந்து கொள்கிறார்கள்”.
’அதனால் ஒரு ஆடியோ லான்ச் மாதிரியான விழாக்களில் தங்களுடைய மனக்குமுறலை கொட்டுகிறார்கள். கடந்த முறை குபேரா ஆடியோ லான்ச்சில் தனுஷ் பேசியது ஒருபுறம் பாசிட்டிவாக இருந்தாலும் மறுபுறமும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் இந்த முறை அடக்கி வாசித்து விட்டார். அவருடைய வாயிலிருந்து வர வேண்டிய வார்த்தைகள் எல்லாம் அவரின் மேனேஜர் வாயிலிருந்து வந்து விட்டது”.
”இங்கே தனுஷை ஒரு பெண் பித்தனாக மாற்றி உள்ளார்கள். இங்கு யாருக்கு என்ன டைவர்ஸ் நடந்தாலும் அதற்கு காரணம் தனுஷ்தான் என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. அப்படி விஷயங்கள் பரப்பும் போது அதை மக்கள் நம்புவதற்கான வாய்ப்பு அதிகம். தேவையில்லாமல் தனுஷ் மீது பொய்கள் பரப்பப்படுகிறது. ஒரு கட்டத்தில் மக்களும் இதை நம்பி விடுவார்கள். இது தொடர்ந்து கொண்டே வருவதால் இன்று தனுஷ் அதை எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்”.
”ஜிவி பிரகாஷ், ’ஒரு நான்கு பேர் தனுஷை செய்து வருகிறார்கள்’ என்று கூறியிருந்தார். அந்த நான்கு பேரில் முதல் ஆள் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், நயன்தாரா இப்போது அந்த நாலாவது ஆள் யார்? என்பதுதான் கடும் போட்டியாக இருக்கிறது. அந்த குரூப்பில் அனிருத், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் இருந்தார்கள். அதனால் இவர்களில் ஒருத்தரை கூட அந்த நான்காவது ஆளாக சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் இவரின் கிரீன் எனிமி சிம்புவை கூட அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்”. என்று கூறியுள்ளார்.
