ப்ரொடியுசர் கிடைக்காமல் திணறும் சிவகார்த்திகேயன்.. திடீர் தளபதிக்கு வந்த சோதனை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அமரன் எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்துவிட்டு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவரின் ’மதராஸி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படம் வெளியாகி முதல் நாளிலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ’பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு உடன் கூட்டனி, அதன் பிறகு சிவகார்த்திகேயன் எந்த திரைப்படத்திலும் கமிட்டாகவில்லையாம். காரணம் தயாரிப்பாளர் பிரச்சனை என்று மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகர்மான வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார் மேலும் அவர் கூறியதாவது
”தமிழ் சினிமாவில் தற்போது அனைத்து முன்னணி ஹீரோக்களும் தயாரிப்பாளர் கிடைக்காமல் திணறி வருகிறார்கள். சொல்லப்போனால் தயாரிப்பாளர்கள் உஷாராகி விட்டார்கள் என்று சொல்லலாம். காரணம் ஹீரோக்கள் கேட்கும் பணத்தை கொடுத்து நஷ்டம் அடைந்து தான் மிச்சம். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக தான் இருக்கிறார். ஆனால் அவருடைய படத்தை தயாரிப்பதற்கு இங்கு யாரும் முன் வரவில்லை என்று கேள்விப்பட்டேன்”.
”வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் நடிக்கப் போவதாக இருந்தது. ஹீரோ-டைரக்டர் காம்பினேஷன் அமைந்தும் இவர்களுக்கு இன்னும் சரியான தயாரிப்பாளர் அமையவில்லை. மதராஸி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அதன் தயாரிப்பாளரிடம் இந்த கதையை கூறி இருக்கிறார் சிவா. அப்படி இருந்தும் அந்த தயாரிப்பாளர் புஷ்கர்-காயத்ரி, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்க தயங்குகிறார்”.
”இதன் பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் விலகி கொள்கிறார்கள் என்று தெரிகிறது. மற்றொருபுறம் ஹீரோக்களின் சம்பளம் குறைக்க வேண்டும்”. என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர்களின் பஞ்சம் தற்போது தலைவிரித்து ஆடுகிறது. ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க முன் வருவார்கள் என்றால் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் பயணிக்கும் என்பது சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
