வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்ட நயன்!.. புள்ளி விவரத்துடன் பொளந்து கட்டிய வலைப்பேச்சு!..

by Ramya |
valaipechu
X

valaipechu

நடிகை நயன்தாரா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை நயன்தாரா தற்போது வரை ஹீரோயினியாக ஜொலித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் 20 வருடங்கள் கடந்து வெற்றிகரமாக தனது திரைபயணத்தை கொண்டு சென்று இருக்கின்றார். இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிறகும் தமிழ் சினிமாவில் அவருக்கான மார்க்கெட் குறையவில்லை.

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்த வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு யூடியூப் சேனல் குறித்தும் அவர்களின் கருத்துக்கள் குறித்தும் பேசி இருந்தார். அது மட்டும் இல்லாமல் அவர்களை குரங்குகள் என்று குறிப்பிட்ட பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் வலைப்பேச்சு யூடியூப் சேனல் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

வலைப்பேச்சு விளக்கம்:

நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு நடிகை நயன்தாரா பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் வலைப்பேச்சு சேனலை குறிப்பிட்டு சொல்லாமல் எங்களைக் குறித்தும் எங்களின் கருத்துக்கள் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். பொதுவாக நயன்தாராவை யாராவது இன்டர்வியூ எடுத்தால் கேள்வியும் நானே பதிலும் நானே என்று நயன்தாராவே கேள்வியை தயார் செய்து ஆங்கரிடம் கொடுத்து பேட்டி எடுக்க வைப்பார்.


ஆனால் தேசிய ஊடகங்களில் இது போன்று நடப்பதற்கு வாய்ப்பு கிடையாது. அப்படி ஊடகங்கள் சில கேள்விகளை தொகுப்பாளர் தரப்பிலிருந்து முன்வைக்கும் போது அதனை நடிகை நயன்தாரா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வலைப்பேச்சு சேனலை தாக்கி பேசி இருக்கின்றார். நாங்கள் 50 வீடியோ போடுகிறோம் என்றால் அதில் 45 வீடியோ நயன்தாராவை குறித்தது தான் என்று கூறுவது முதலில் பொய்.

உதாரணத்திற்கு கடந்த ஒரு நாலந்து மாதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டோம் என்றால் ஆகஸ்ட் மாதம் நயன்தாரா குறித்து ஒரு செய்தி மட்டுமே வெளியிட்டு இருக்கின்றோம். செப்டம்பர் மாதம் இரண்டு செய்தி, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தலா ஒரு செய்தி, டிசம்பர் மாதத்தில் மட்டும் மூன்று செய்திகள் கொடுத்திருக்கின்றோம். மாதம் நாங்கள் 30 வீடியோக்களை கொடுக்கின்றோம்.

அதில் உங்களை குறித்து நாங்கள் பேசுவது வெறும் ஒன்று அல்லது இரண்டு செய்திகள் தான். அதுவும் இவர் குறித்த நெகட்டிவ் செய்தி எதுவும் கிடையாது. இவர் எந்த திரைப்படங்களில் நடிக்கின்றார். எந்த படத்தை தயாரிக்கின்றார் என்பது குறித்து தான் நாங்கள் பேசி இருக்கின்றோம். அவரைக் குறித்து பேசி தான் நாங்கள் பணம் சம்பாதித்து வருகின்றோம் என்கின்ற பாணியில் நயன்தாரா பேசியிருக்கின்றார்.

முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் சினிமாவில் மார்க்கெட்டை இழந்த நடிகை நீங்கள். ஒரு நடிகை படப்பிடிப்புக்கு வரும்போது தயாரிப்பு குழுவினருடன் எப்படி நடந்து கொள்கிறார்கள். எப்படி ஒத்துழைத்து செல்கிறார்கள் என்பதை நாங்கள் கூறியதுண்டு. நயன்தாராவை மட்டுமல்ல பல நடிகைகள் குறித்து வலைப்பேச்சு சேனலில் நாங்கள் பேசி இருக்கின்றோம்.

இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு தற்போது நயன்தாரா வலைப்பேச்சு குறித்து பேசியதற்கு காரணம் தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக இல்லாமல் தனுசுக்கு ஆதரவாக பேசியதுதான் முக்கிய காரணம். எங்களுக்கு தெரியும் என்ன நடந்தது என்று, அதை தான் வலைப்பேச்சு சேனலில் நாங்கள் பகிர்ந்து இருக்கின்றோம்.


உங்கள் மீது தவறு இருக்கிறது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லாமல் எங்களை குரங்கு என்று பாடி ஷேமிங் செய்வது எந்த விதத்தில் நியாயம். மேலும் பலரிடம் நாங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தி தான் பிழைத்து வருகின்றோம் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான அவசியம் எங்களுக்கு கிடையாது' என்று பேசி இருக்கிறார்கள்.

Next Story