பிக்பாஸில் வெடித்த சர்ச்சை.. தக்க பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்

by ROHINI |   ( Updated:2025-05-26 07:17:45  )
vanitha
X

vanitha

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். முதல் படமே விஜய்க்கு ஜோடி, அந்த படத்தில் நடித்ததன் மூலம் அந்த நேரத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவும் விஜய்க்கு ஜோடி எனும்போது அடுத்த ஒரு பத்து வருடத்திற்கு இவர்தான் தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு சில படங்களில் நடித்து அப்படியே சினிமாவில் பிரேக் எடுத்தார் வனிதா.

அதன் பிறகு திருமணம், குடும்பம், குழந்தை என அப்படியே செட்டில் ஆகிவிட்டார். அவருடைய திருமணத்திலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் பெரிய பூதாகரமாகவே வெடித்தது. அதனால் விஜயகுமார் குடும்பத்திற்கும் வனிதாவுக்கும் இடையே பேச்சு வார்த்தை இல்லாமல் இப்போது வரை அது தொடர்ந்து வருகிறது. தனி ஆளாக தன்னுடைய இரு மகள்களையும் வளர்த்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

சினிமாவில் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என நினைத்து பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டார். அவருடைய தைரியமான பேச்சு எதையும் வெளிப்படையாக பேசுவது என பிக்பாஸில் மக்கள் அவரை அரவணைத்துக் கொண்டனர். அதிலிருந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு லைம் லைட்டில் தன்னை வைத்துக் கொண்டார் வனிதா விஜயகுமார்.

அவருக்கு பிறகு அவருடைய மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில் ஜோவிகாவை பற்றி பல கமெண்ட்டுகள் போக வலைதளங்களில் பரவியது. தகப்பன் பெயரை மகளோ மகனோ தான் பயன்படுத்துவார்கள். ஜோவிகா ஏன் தன் பெயருக்கு பின்னாடி விஜயகுமார் என பயன்படுத்தி இருக்கிறார் என பல கமெண்ட்டுகள் வந்தன.

அதற்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் வனிதா விஜயகுமார். அவருடைய மகன் ஸ்ரீஹரி மூன்று வயதாக இருக்கும் பொழுது ஜோவிகா வயிற்றில் குழந்தையாக இருந்தாராம். அந்த நேரத்தில் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை மாமனார் மாமியார் வீட்டில் பிரச்சனை என இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட வனிதாவை அவருடைய அம்மா மஞ்சுளா அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தாராம்.

jovika

இங்கு இருந்தால் ஜோவிகாவை நல்லபடியாக பெற்றெடுக்க முடியாது என நினைத்து அமெரிக்கா போக சொன்னாராம். விஜயகுமாரும் அதற்கு முழுவதுமாக சப்போர்ட் செய்திருக்கிறார். அங்கு போய் ஜோவிகாவை பெற்றெடுக்க மருத்துவமனையில் ஃபார்மில் லாஸ் நேம் என்ன என கேட்டிருக்கிறார்கள். அதற்கு வனிதா இதில் தன் கணவன் பெயரை கொண்டு வரக்கூடாது என நினைத்து என்னை அமெரிக்கா வரை அனுப்பி தன் மகளை சுகமாக பெற்றெடுக்க வேண்டும் என எனக்கு சப்போர்ட் செய்த தன் அப்பா பெயரையே பயன்படுத்தினேன். அதுதான் ஜோவிகா விஜயகுமார். கரீனா கபூர் , அபிஷேக் பச்சனனி ஆதரிக்கும் நீங்கள் ஜோவிகா விஜயகுமாரையும் ஆதரிக்க வேண்டும் என வனிதா கேட்டுக் கொண்டார்.

Next Story