கல்யாண வயசுல ஒரு பொண்ணு! இப்படி ஒரு படம் தேவையா? ரசிகரின் கமெண்டுக்கு பதிலடி கொடுத்த வனிதா

by ROHINI |
vanitha
X

vanitha

தன்னைப் பற்றி எப்படிப்பட்ட ஒரு கமெண்ட் வந்தாலும் அதைப்பற்றி கவலையே கொள்ளாமல் அந்த கமெண்ட் கொடுத்த ரசிகரை தன்னுடைய பதிலால் ஒரு வழி பண்ணி விடுவார் வனிதா விஜயகுமார். அடிப்படையில் ஒரு தைரியமான பெண்மணி. எதையும் தைரியமாக எதிர் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகிறார். சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள், விஜயகுமார் குடும்பத்தில் இருந்து பிரிந்து தன்னுடைய மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் வனிதா இப்போது இயக்குனராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் .

அவருடைய இயக்கத்தில் இன்று மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தில் வனிதா ஒரு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் .அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டரும் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் பாத்திமா பாபு, நடிகை கிரண் என எண்ணற்ற பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது .

இந்த படத்தின் மூலம் தன்னுடைய மகள் ஜோவிகா விஜயகுமாரை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறார் வனிதா. வனிதாவை போலவே அவருடைய மகள் ஜோதிகாவும் தைரியமான பெண்ணாகத்தான் இருக்கிறார். அதை பிக் பாஸ் வீட்டிலேயே நாம் பார்த்திருப்போம் .வனிதா விஜயகுமாருக்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் அவருடைய மகள் ஜோவிகா விஜயகுமாரும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் சக போட்டியாளர்களுடன் சண்டை போடுவதை பார்க்கும் பொழுது தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதை சரியாக நிரூபித்தார். அவருடைய பேச்சில் ஒரு முதிர்ச்சி இருந்தது. அந்த அளவுக்கு தன்னுடைய மகளையும் தைரியமாக வளர்த்து இருக்கிறார் வனிதா விஜயகுமார். இந்த நிலையில் படத்தைப் பற்றி பல youtube சேனல்களில் ஜோவிகா மற்றும் வனிதா ஆகிய இருவருமே பேசி வந்தனர்.

அதில் ஒரு யூடியூப் சேனலில் ரசிகர்கள் சில கமெண்ட்டுகள் கொடுத்திருக்கின்றனர். அதற்கு உங்களுடைய ரியாக்ஷன் என்ன என்பது பற்றிய ஒரு டாஸ்க் இருந்தது. அதில் ஒரு ரசிகரின் கமெண்ட்டு என்னவெனில் கல்யாணம் ஆகுற வயசுல ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு இந்த வயசில் உங்களுக்கு இப்படி ஒரு படம் தேவையா என்ற ஒரு கேள்வி அதில் இருந்தது.

அதற்கு வனிதா விஜயகுமார் கொடுத்த பதில் இதோ. அதாவது 60 வயசுக்கு மேல் உள்ளவர்களிடம் இருக்கும் அந்த பக்குவம் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் இருப்பதில்லை .இதுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என தெரியவில்லை. உங்க பொண்ணு பணத்தை வாங்கி நாங்க செலவழிக்கவில்லை. படத்தை பார்த்தா பாருங்க. இல்லை என்றால் போய்கிட்டே இருங்கள் .அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் என மிகவும் அசால்ட் ஆக பதில் கூறினார் வனிதா.

Next Story