மஞ்சுளா இல்லீகல் மனைவியா?.. பிடிக்கலனா சும்மா இருக்கலாம்… அதுக்கு இப்படியா பேசுவீங்க வனிதா!..
Vanitha: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய தந்தை குறித்து பேசிய விஷயம் தற்போது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் சர்ச்சை குடும்பங்களில் முக்கிய இடம் விஜயகுமாருக்கு தான். அவருக்கு முதலில் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகியோர் பிறந்தனர்.
இதை தொடர்ந்தே நடிகை மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் பிறந்தனர். இதில் அனிதாவை தவிர மற்ற அனைவருமே நடிகைகளாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தும் இருந்தனர்.
அதுபோல, மற்ற மகள்கள் போல இல்லாமல் வனிதா தந்தை சொல்லை கேட்காமல் இருந்ததாக வீடியோக்கள் வெளியானது. முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்தார். மற்றொரு திருமணம் செய்து கொண்டார். அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.
இப்படியே வனிதா திருமண சர்ச்சையே பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்தனர். மற்ற அனைவரும் ஒன்றாக இருக்க வனிதா தன்னுடைய மகள் ஜோவிகாவுடன் தனியாகதான் இருந்து வருகிறார்.
தன்னுடைய குடும்பத்தின் மீது அவர் பாசமாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும் அடிக்கடி அவர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையை கிளப்பி விடுவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய தந்தை விஜயகுமார் மற்றும் தாய் மஞ்சுளா குறித்து பேசி இருக்கிறார்.
அதில், நாங்கள் தஞ்சாவூரை பூர்வீகமாக சேர்ந்தவர்கள். அங்கு இருக்கும் அனைத்து ஆண்களுக்குமே இரண்டு மனைவிகள்தான். என் தந்தைக்கு கூட இரண்டு மனைவிதான். இதை நீங்க லீகலாக நினைத்தாலும் சரி. இல்லீகலாக நினைத்தாலும் சரி எனப் பேசி இருப்பது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.